மனிதனாய் மாறுவது எப்போது
குடி கெடுக்கும்
'குடி'க்குள்
குடி போனாய்;
மனிதனாக பிறந்த நீ
மக்கள் பண்பு தொலைத்து
மரமானாய்.
'குடி'
அது குடிப்பது உன்னை மட்டுமல்ல ,
உன்
கிளை,இலை,தளிர்,மலர்;
காய், கனி.
மூழ்கப்போவது
உன் குடி_குடும்பம் .
விரைவில்,
மரமான நீ
உன் சிதைக்கு விறகாக,
பூமிக்கு உரமாக
போவது உறுதி.
கேடு கேட்ட
இந்த குடி தொலைத்து
மரமான நீ
மனிதனாவது எப்போது.