எழுபதுகளில் எண்பதுகளில் பிறந்த கொடுத்து வைத்தவர்கள்

அதிர்ஷ்டசாலிகள் நாங்கள் அன்று
இன்று எண்ணுகையில்
எத்தனை மாற்றங்கள், ஏமாற்றங்கள்;

சிறார்களை புத்தக மூட்டை சுமக்க விடவில்லை
பொதிகள் இங்கே போக்கிடமேது

நாங்கள்
மோட்டார் சைக்கிள்களை ஓட்டி மகிழ்ந்தோம்
ஹெல்மெட் கவலை இல்லாமலே

மாலை மஞ்சள் வெயிலில் ஆடி திரிந்தோம்
தொலைக்காட்சி முன் எங்களை யாரும் பூட்டி வைக்கவில்லை

நிஜ முகங்களுடன் நெருக்கம் அதிகம்
'நெட்' நண்பர்கள் அன்று இல்லை

நா வறண்டு போகையில் குழாய் தண்ணீரில் குதூகளித்தோம்
பாட்டில்களை நாங்கள் பார்த்ததே இல்லை
பழரசம் பகிர்ந்தோம் பாதிப்பு இருந்ததே இல்லை

இனிப்பும் சோறும் தட்டு நிறைய கொட்டிக்கொண்டோம்
எடை கூடவில்லை தொப்பை போட்டதில்லையே
வெறும் காலில் வளம் வந்தோம் ஒன்றும் ஆனதில்லை
ஆரோக்கிய உணவுகள் என்ற ஒன்று எங்களை அண்டியது இல்லை
விளையாட்டுக்கு வேண்டியதை நாங்களே உருவாக்கினோம்

ஈன்றவர்கள் பணக்காரர்களாய் இல்லையெனினும்
பணத்திற்காக பணயம் வைத்ததில்லை வாழ்க்கையை நாங்கள்
பண்பை அன்பை பரிமாறிக்கொள்ளவே பிறந்தவர்கள் ஆனோம்

எங்கள் அருகாமையில் அவர்கள் அவர்கள் மடியில் நாங்கள்
ஒரு பார்வை ஒரு ஸ்பரிசம் ஒரே வார்த்தை எம்மை ஆட்கொண்டது

தொலை பேசியை நாங்கள் தொட்டதே இல்லை
டாக்டர் தான் வீட்டுக்கு வருவார் நாங்கள் அவரிடம் சென்றது இல்லை

உணர்வுகளை உண்மையாக வெளிப்படுத்தினோம்
உருவங்கள் பதிந்தன உள்ளங்களில் நெருடின

எண்ணங்கள் எழுதப்பட்டன அச்சில் அசலாய் வெளிப்பட்டன
அழகு சாதனங்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள்
தாக்கம் இல்லாமல் நாங்கள் எளிமையாக இன்னும் அழகாக இருந்தோமே

எக்க சக்கமாய் நண்பர்களுடன் ஏராளமான அரட்டை கச்சேரிகள் உண்மையான நட்பு உன்னதமான விழிகளில் பார்க்க முடிந்தது

தோழர்கள் வீட்டுக்கு சொல்லாமலே சென்றோம் தோழமையுடன் உண்டு களித்திருந்தோம் முன் அனுமதி அன்று தேவைப்படவில்லை

கருப்பு வெள்ளையில் எங்கள் நிழற்படங்கள் மனதிலோ இன்னும் அத்தனை வண்ணங்கள்

எழுதியவர் : செல்வமணி (23-Aug-15, 11:16 am)
பார்வை : 74

மேலே