ஏ பாடல் ஒன்று ரீமிக்ஸ்

ஏலே...! ஏலே...! ஓடாதே நில்லு..!
ஏன் ஓடுற? எங்க ஓடுற?
சொல்லு தம்பி!
......................................................................................................(ஏலே...! ஏலே...!)
......................................................................................................(ஏலே...! ஏலே...!)
இன்னும் பள்ளிக்கூடம் சேக்கல...
உஞ்சேட்ட கொஞ்சமும் கொறையல...
இப்ப எங்கநீயும் போறன்னு
சொல்லிப்புட்டுப் போடா...!

இன்னும் பள்ளிக்கூடம் சேக்கல...
உஞ்சேட்ட கொஞ்சமும் கொறையல...
இங்கநீ நடத்தும் அரிச்சுவடி
வாத்திமாரும் புரிஞ்சிருப்பாரோ?
......................................................................................................(ஏலே...! ஏலே...!)
நெறமாச கொழந்தையாக
நீயிருந்த நீயிருந்த
அப்பொழுதே அப்பொழுதே

நம்மயிந்த ஒலகத்திலே தனியாக
தவிக்கவிட்டு....
தவிக்கவிட்டாங் கொப்பனுமே..!

கட்டுப்பாட்ட எழந்துநிக்கும்
ஒரு கப்பலப் போல - நான்
தவிக்கையிலே நீ பொறந்த
நங்கூரம் போல...!

எனக்கெனவே பொறந்துவந்த
ஒரு ஆண்டவன் தான் நீயே - நான்
ஒனக்கெனவே வாழ்ந்திருப்பேன்
ரெட்ட உசிரோட.....

அய்யா... அய்யா.. ராசாவே நில்லு...!
இந்த ராச்சியம்பூராம்
ஒனக்கெனவே நில்லு...!
......................................................................................................(அய்யா... அய்யா..)
தாய்நாடே மெச்சும்படி
உனயிங்கு நலமாக
வார்த்தெடுப்பேன்...! வார்த்தெடுப்பேன்...!

நாடிநரம்பு எல்லாமே
தேசப்பற்று ஒனக்குள்ளே
ஓடிடணும்... ஓடிடணும்...

நம்ம தேசம் நமக்குப் பெருசு....
சட்டமும் திட்டமும் பழசு...
நீவந்து... நீவந்து...
மாத்திடனும் புதுசு....!

இந்தப் பாவிமக உசுரு...
உன்ன நம்பித்தானே இருக்குது....
இவபோல... இவபோல...
இந்தியாவும் உன நம்பித்தான்...!
......................................................................................................(அய்யா... அய்யா..)
நீயந்த ஆறப்போல இருக்கணும்....
உந்தடைகளத்தான் ஒடைக்கணும்...
நீபோடும் உத்தரவில்
ஐநாவுமே நடக்கணும்....!

நல்லவன் சொன்னது நடக்கணும்...!
நல்லது எல்லாம் கெடைக்கணும்...!
அதுக்காக.. அதுக்காக....
அர்ப்பணிப்பாய் உன்னயுமே...
சம்மதிப்பேன்....!!!

- இராசகோபால் சுப்புலட்சுமி

எழுதியவர் : இராசகோபால் சுப்புலட்சுமி (7-Jul-14, 10:20 am)
பார்வை : 202

மேலே