என் அன்பு கணவா

செல்லுமுன் நீயிட்ட
முன்னெற்றி முத்தம் ஒன்று,
இன்னமும் இருக்குது
ஈரமாய் ...
என் ஞாபகமாய் இருக்கட்டுமென,
நீ கொடுத்த சட்டைக்குள்
தணியவில்லை இன்னமும்...
உன்னுடம்புசூடு;
நான் கொஞ்சினாலும்,
திட்டினாலும், அழுதாலும்,
அமைதியாகவே இருக்கிறது....
உன் தலையணை;
எப்பொழுதும் இடையறாது,
குறுகுறுவென பார்க்குது...
உன் புகைபடம்;
காலைச்சுற்றும் பூனையாய்
உன்னையே சுற்றும் மனம்,
வயிற்றுக்கு சோறில்லை
என்றாலும் எனக்கு தோள்சாய
நீ வேண்டும் என்கணவா....
சவுதி வேண்டாம்,
சடுதியில் வந்திடு என்கணவா...