"கனவு காண்" என்று சொல்லி எனக்கு வாழ்வளித்தவர்... அப்போது...
"கனவு காண்" என்று சொல்லி எனக்கு வாழ்வளித்தவர்...
அப்போது நான் கைத்தறி நெசவாளன்....
இன்று நான் அரசு ஊழியன்....
என் குடும்பம் அறிந்த ஒரே குடியரசுத்தலைவர் அவர்...
ஆம்... என் தலைவர் அவர்...
சிலை வைக்காமல்....
பாலாபிஷேகம் செய்யாமல்...
சுவரொட்டி ஒட்டாமல்...
சும்மானாச்சுக்கும் புகழாமல்....
உடலில் ரத்தம் உள்ளம் வரைக்கும்
உத்தமரின் வாக்குப்படி நடக்க முயற்சிப்பேன்....
என் தலைமுறைக்குச் சொல்லிக்கொடுப்பேன்
"அக்கினிச் சிறகுகளை" விரிக்க....