Thanga Arockiadossan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Thanga Arockiadossan |
இடம் | : avadi...chennai 600054 |
பிறந்த தேதி | : 07-Oct-1958 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 1137 |
புள்ளி | : 462 |
samuthaya sinthanaiyalan.............
கவலை மனதை அறுத்தாலும்
தடைகள் வழியை மறித்தாலும்
துயர்கள் துரத்தித் தொடர்ந்தாலும்
வறுமை வறுத்து எடுத்தாலும்
பிணியும் விடாது வதைத்தாலும்
மதியும் குழம்பித் தவித்தாலும்
படிப்பில் கவனம் சிதைந்தாலும்
தொழிலில் பிடிப்பே குறைந்தாலும்
எழுத்தில் லயித்தால் சுகமேதான் ...!!!
நீலவான வெண்ணிலவே நீராட வந்தாயோ
ஓலமிடும் ஆழியில் ஒற்றையாய் - கோலயெழில்
பொன்மேனி மின்னிட பூரித்து மேலெழுவாய்
மென்னடை போட்டு மகிழ்ந்து !
இந்த பூக்களை zoom பண்ணி பார்க்கவும் ..
கடனாளியாகவே இரு....
======================
உனக்கும் எனக்கும்
இடையேயான
அன்பு பரிவர்த்தனைகள்
மனப் பதிவேடுகளில்....
கணக்குகளை சரிபார்க்கிறேன்
சமன் செய்ய முடியவில்லை..
நீ திரும்ப செலுத்தாததால்
உன் கணக்கில் சொச்சம்...
திரும்ப செலுத்திவிடாதே
பற்றாய் வைத்துக் கொள்கிறேன்
கடன் கணக்கில் நிரந்தரமாய்...
அடுத்த பிறவியில்
கடனை வசூலிக்க
என் கணக்கில்
இனி ஜென்மமில்லை
நான் கடைசி பிறவியில்...
என்றாவது ஒரு நாள்
என் இறப்பு செய்தி
உன் செவி எட்டலாம்
அன்று
எனக்காக நீ
ஒரு துளி கண்ணீர் சிந்து
கணக்கு தீர்ந்துவிடும்...
அன்பே .......!
உன்னை கண்ணில் வைத்து
என்னை
உன்னில் வைத்தேன்
சின்ன சின்ன
தொடுதல்களில்
தொட்டு மகிழ்ந்து
என்னை உணர்ந்தேன் ...!
உன்
உதட்டுப் புனகையை
உண்மை என உணர்ந்து
என்னை கொடுத்தேன்
அது உன்
உதட்டுச் சாயம் போல்
ஒன்றும் இல்லாமல்
போனதால்
என்னை தொலைத்தேன்
அன்பே ...........
நான் ...
என்னை தொலைத்தேன் ...!
தோழா......!
தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி
மனம் சோர்ந்திடாமல் இருப்பதே
சிகரத்தை தொட சிறந்த வழி ...
காற்றுக்கு தடை யார் போடுவது - உன்
சிந்தனைக்கு வேலி யார் இட்டது ...?-தோழா ...!
உரத்த சிந்தனையால் உலகை புரட்டிப் போடு
தன்னம்பிக்கை சிறகை விரித்து இத்
தரணிக்கு உன்னை உணர்த்து ....
வித்தின் ஓட்டப் பந்தயத்தில் ஓடி
தாயின் கருப்பையில் ஜெனிததவனே
நிழலில் நீ இளைப் பாருவதை விட - பலர்
தங்க நிழல் தரும் மரமாய் இரு .......
பாறையானவனே... .! உளியின் ஒத்தடத்தில்
உன்னை பதியன் போடு ! புடம் போடப் போட
மெருகேறும் தங்கத்தின் தரம் போல் - இத்
தரணிக்கு உன்னை உணர்த்த தடைகளை தாங்கிக் கொ
அன்பே
உன்னை
வாசிக்க
நான்
யாசித்தேன்
திறந்த
புத்தகமான
உன்னை
சுவாசிக்க
இன்று
யோசிக்கிறேன்
திறந்த
வெளிப்
புல்வெளியே
உனக்கு
வேலிப்
போடும் முன்னே
உன்னை
வேட்டையாடியது
யார் ..?
அன்பே
நீ
யோசிக்காதே
வாசிக்க
யாசகமாக வா ...................
குடும்ப கூட்டுக்குள்ளே மரமாய் இருந்திட்டாள்
உறவுக் கிளையாய் வளர்ந்து அன்பை பகிர்ந்திட்டாள்
சமுதாயம் தழைக்க கனிகளை தந்திட்டாள் - கட்டியவனுக்கு
காதலை தந்து காலமெல்லாம் காத்திட்டாள் ............!
வளர்ந்த கிளையில் இருந்த பறவைகள் கனிகளை
தின்று வேரு மரத்துக்கு தாவிப் பறந்தன -கட்டியவனோ
காலத்தால் கவரப் பட்டு காணாமல் போனான்-சதையும்
ரத்தமுமாய் தழைத்து வாழ்ந்தவள் இன்று தளர்ந்து போனாள்
தள்ளாத வயதினிலே தடுமாறி தடுமாறி
தளர்ந்துப் போன தாயவளும் தவமாய் கிடக்கின்றாள்
தவிக்கவிட்டுப் போன தங்க மக்களும் ஒரு நாள்
தளர்ந்துப் போய் தவிக்கும்போது தாவி அணைத்து
தங்க மடி தந்து தாங்கிப் பிடித்திடவே..
1. மண்ணில் தவழும் என் மடி மீன் -எனும் வரிகளில் தொடங்கி வரி ஒன்றுக்கு 5 சொற்கள் வீதம் 8 வரிகளில் ஒரு கவிதையும் அதற்கு தக்க படமும் பதிவு செய்யவும்..படம் 75% மதிப்பெண் 25%கவிதைக்கு மதிப்பெண் என அறிக
2. எதுகை மோனை முக்கியம் .அநாகரீகமான படம் தவிர்க்கவும்
3.தாய்ப்பால் நாள் 1.8.14 அன்றுதான் படைப்புகள் தளத்தில் பதிய வேண்டும்.முன்னரோ பின்னரோ பதிபவை நிராகரிக்கப்படும்..
என் பெயர் பணம்
நானென்றால் அனைவர்க்கும் மனம்
நான் தேவைக்கு மீறினால் கனம்
பிறகு வருந்த வேண்டும் தினம்
என்னை கொடுத்துபார் தானம்
பிறகு அடைந்துடுவாய் ஞானம்
நாடு முழுவதும் என் பாய்ச்சல்
வீடு முழுவதும் என் காய்ச்சல்
நான் பிறந்தது ரிசர்வ் பாங்கில்
என்னால் பலர் இருப்பது சென்ட்ரல் ஜெயிலில்
தேச தந்தை என் profile picture
தேச துரோகிகள் என்னால் out of the picture
சூதாட்டத்தில் மறைவேன் பொய்யாக
தொண்டாற்றுவதில் உதவுவேன் மெய்யாக
நான் விரும்புவது நாட்டில் முன்னேற்றம்
அதை பார்க்கவிடாமல் அரசியல் ஏமாற்றும்
அரசியல்வாதிகள் கையில் இருந்தால் நான் கருப்பு
ஏழைகள் கையில் இருந்தால் அது
தங்கம் ஆகிய "த"கரம்
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?
முற்றிலும் "த"கர எழுத்துக்களை மட்டும் கொண்டு எழுதப்பட்ட வெண்பா.காளமேகப் புலவரின் வார்த்தை விளையாட்டின் விளக்கம்
வண்டே,
தத்தித் தாது ஊதுதி – தத்திச் சென்று (மலர்களில் உள்ள) மகரந்தத்தை ஊதுகிறாய் / குடிக்கிறாய்
தாது ஊதித் தத்துதி – குடித்தபின் மீண்டும் தத்திச் செல்கிறாய்
துத்தித் துதைதி – ’துத்தி’ என்று ஒலி எழுப்பியபடி அடுத்த (...)
கோப உணர்வு சராசரியாய் எவ்வளவு நேரம் இருக்கும் ஒரு மனிதனிடம் ?