என்னை தொலைத்தேன்

அன்பே .......!
உன்னை கண்ணில் வைத்து
என்னை
உன்னில் வைத்தேன்

சின்ன சின்ன
தொடுதல்களில்
தொட்டு மகிழ்ந்து
என்னை உணர்ந்தேன் ...!

உன்
உதட்டுப் புனகையை
உண்மை என உணர்ந்து
என்னை கொடுத்தேன்

அது உன்
உதட்டுச் சாயம் போல்
ஒன்றும் இல்லாமல்
போனதால்

என்னை தொலைத்தேன்
அன்பே ...........
நான் ...
என்னை தொலைத்தேன் ...!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (10-Nov-14, 1:19 am)
Tanglish : ennai tholaithen
பார்வை : 486

மேலே