வானம் உன் வசப்படும்

தோழா......!

தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி
மனம் சோர்ந்திடாமல் இருப்பதே
சிகரத்தை தொட சிறந்த வழி ...

காற்றுக்கு தடை யார் போடுவது - உன்
சிந்தனைக்கு வேலி யார் இட்டது ...?-தோழா ...!
உரத்த சிந்தனையால் உலகை புரட்டிப் போடு
தன்னம்பிக்கை சிறகை விரித்து இத்
தரணிக்கு உன்னை உணர்த்து ....

வித்தின் ஓட்டப் பந்தயத்தில் ஓடி
தாயின் கருப்பையில் ஜெனிததவனே
நிழலில் நீ இளைப் பாருவதை விட - பலர்
தங்க நிழல் தரும் மரமாய் இரு .......

பாறையானவனே... .! உளியின் ஒத்தடத்தில்
உன்னை பதியன் போடு ! புடம் போடப் போட
மெருகேறும் தங்கத்தின் தரம் போல் - இத்
தரணிக்கு உன்னை உணர்த்த தடைகளை தாங்கிக் கொள் ..!

தோழா.......!

சிகரம் தொட்ட உனக்கு வானம் வெகு தூரம் இல்லை
இலக்கை அடைய முதல் அடி முக்கியமல்லவா ...?- தோழா
அன்புச் சங்கிலியில் மனித உணர்வுகளை பிணைத்து
மனிதத்தில் ஏறி வானம் தோடு ..! வானம் உன் வசப் படும் ...!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (10-Nov-14, 12:49 am)
பார்வை : 1284

மேலே