நோய்கள் கொண்டு வளர்கிறது

#நோய்கள் கொண்டு வளர்கிறது...

கட்டடம், கதவுகள் ஜன்னல்களுடன்
சுற்றிய மதில் சுவர்
பிரதான வாயிலில்
நீண்டு அகண்ட
இரும்பு "கேட்'
இப்படியாகத்தான்
சாதாரணமாகத் துவங்கப் பெற்றது
அந்த மருத்துவமனை..!

வாயிற் காவலர்கள்
வாகனங்கள் ஓய்வு கொள்ள
வசதியான கொட்டகை
வாயிலில் பூத்துக்குலுங்கும்
மலர்த்தோட்டம்
உள்ளே வண்ணமயமாய்
கொத்து விளக்குகள்
துறைக்கொரு துணைக் கட்டடங்கள்
என்று பிரம்மாண்டமாய்
இந்நாளில் மின்னும்
மருத்துவமனை வாழ்த்துகிறது
நோயாளிகள் வாழ்கவென்றும்
நோய்கள் வளர்கவென்றும்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (29-Dec-24, 9:42 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 6

மேலே