அவள் வருகிறாள்
அவள் வருகிறாள்.
குற்றாலத்தில்
ஒரு சலசலப்பு - அது
நீர் வீழ்ச்சியின்
சலசலப்பு.
காட்டில்
ஒரு சலசலப்பு - அது
யானைகள் வரும்
சலசலப்பு.
வானத்தில்
ஒரு சலசலப்பு- அது
இடியும் மின்னலும்
போடும் சலசலப்பு.
மாந்தோப்பில்
ஒரு சலசலப்பு - அது
குயில்களின்
சலசலப்பு
சந்தியில்
ஒரு சலசலப்பு - அது
அவள் வருகை தரும்
சலசலப்பு.
சண்டியூர் பாலன்.