அறியா பயணத்தில்
பிறக்கும் போது
அறியவில்லை
பாழும் உலகம்
வஞ்சனை நிறைந்த
மனிதர்கள் காணும்
இடமெல்லாம் நிந்தனை
செய்யும் எண்ங்களால்
நிறைந்திருப்பதை வளர்
பருவத்திலும் பார்வையாளனாக
மட்டுமே முதுகெலும்பின்றி
சுயம் தொலைத்து முற்றுப்
பெறாத தேடலில் முடிவு
அறியா பயணத்தில்....