umauma - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : umauma |
இடம் | : கோபிசெட்டிபாளையம் |
பிறந்த தேதி | : 05-Mar-1968 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 450 |
புள்ளி | : 177 |
படிப்பு அதிகமில்லை. படிப்பதில் ஆர்வம் அதிகம். கவிதை சமீப கால முயற்சி. குழந்தைகள் பேச, நடக்க பழகுவது போல் ,பிழையிருப்பின் திருத்தம் உரைத்திட்டால் நன்றி மறவேன். சிறப்பாக எழுத ஆவல்.
ஆலோசனகள் வேண்டுகிறேன்.
எட்டையபுரத்து கவிஞன்
அவன்!
யாரும் எட்டாத கவிஞன்
அவன்!
தமிழை நாவில்
சுமந்த அக்காலத்திலே
இதயத்தில் சுமந்து சுவாசித்தவன்!
தமிழை எண்ணெய் எனவும்
வார்தைகளை திரி எனவும்
மறு உருவம் தரித்து
கவிதைகளாக பெற்றெடுத்து
உலகிற்கு தத்துக்கொடுத்து
தீச்சுடரென ஓளிரவிட்டான்!
தேனை மட்டுமே
உண்ணுமாம் தேனீ
அவன்
தமிழை மட்டுமே
உண்ணும் ஞானி!
வெள்ளைத்தோல்களை உரிக்க
தன் அணு அளவு சிந்தனைகளையும்
உரித்தெடுத்தான் கவிதைகளாக!
ஆயுதம் ஏந்திய போராட்டங்கள்
அவன்!
கவிதைகளில்
அவன்!
தேன் சிந்தும் வரிகளை
கண்டபோதெல்லாம்
வான் சிந்தியிருக்கக்கூடும்
மழையை!
அவன்!
கவிதைகள் நெருப்
கானல் நீரான என்
கனவில் காணும்
இடமெங்கும் நீ
ஓடும் நீராக
வந்தாய் என்
வாழ்விலும் வசந்தம்
காணச் செய்ய....
நீண்ட வருட தவம்
நல்ல நட்பினை வேண்டி
எதிர்பாரா தருணத்தில் இனிய
நட்பாக இறைவன் உனை
அனுப்பினான் காலம் கடந்து
வந்த நட்பாக நீவந்தாலும்
உன் நட்பின் நற்பலனாக
கிறுக்கலான கவிதை என்
வாழ்வில் இடம் பிடித்ததே
என் கவிதைகள் யாவும்
உனக்கே உனக்கு மட்டும்
அன்பின் இனிய நல்நட்பே
பிரிவு நமது நட்புறவை
நல் வலுப்படுத்தவே நம்
நினைவுகளைக் கொண்டு....
விட்டுப் பிரிய நினைத்தாலும்
விடாமல் எனை துரத்துகிறதே
உன்னுடன் கழித்த இனிய
நாட்களின் நினைவுகள் சுகமான
சோகத்தை சொந்தமாக்கியே ....
தொல்லை தரும் நினைவுகளை
தொலைத்து விட ஆசை
தொலைத்து விட்டால்
திரும்ப கிடைத்திடுமா
என சந்தேகம்..உன்னை
உண்மையாக வெறுத்தால்
அல்லவா உன் நினைவுகளை
தொலைத்து நிம்மதியுடன்
மீதம் உள்ள நாட்களை வாழ....
பலகாலம் உன்னோடு வாழ்ந்த
ஆனந்த அனுபவம் இந்த
சில காலம் உன்னோடு
பழகிய சில நாட்கள்
இன்பத்திலும் துன்பத்திலும்
உன்னோடு சேர்ந்து வாழனும்
பிரிவென்ற துயர் நம்மிடையே
என்றும் வராமல் காக்க நம்
அன்பு தடை செய்திடட்டும்
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
இந்த நொடியே இறந்தாலும்
உன் நினைவுகள் என்னுடனே
உடன் வந்திடும் உருவமற்ற
காற்றுடனே கலந்து கலங்கின
கண்களை காண சக்தியற்ற
என் விழிகள் கண்ணீருடன்
கலந்ததே உன் விழிகளுடன்