பாலவேலாயுதம் மு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாலவேலாயுதம் மு |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 19-Mar-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 162 |
புள்ளி | : 15 |
கலைமகள் வனத்தில், கவிதை சோலையுள், செடியாக முளைத்திருகிறேன்.......மரமாக விரும்புகிறேன்"
விழுந்தது போதும் எழுந்திடடா தமிழா!
ஈழத்தமிழனே தவிர ஈனத்தமிழனல்ல நீ!
அடிமையொன்றும் அல்ல...வீரத்தின் அடையாளம் நீ!
நிமிர்ந்து நடைபோட்டு நிரூபித்திடு நின் புகழை!!!
தெற்கில் உதித்து வடக்கில் வலம் வந்து
உலகிற்கு ஒளி தந்த சூரியனே!
நின் ஆராய்ச்சி வானுலகிற்கு வேண்டுமென
எடுத்து கொண்டானோ ஈசன்?
மன்றாடி கேட்கிறோம்.....
மறுபிறவி வேண்டுமென பிரம்மனிடம்!
இன்னொருமுறை கலாமை கருவில் சுமக்க
தவமிருகிறாள் தமிழன்னை!!!
வணக்கம் அன்பர்களே,
உங்களுக்கு தமிழ் பதித்த ஆடைகள் அணிய விருப்பமா, இலவசமாக பெற தயாராக உள்ளீர்களா ?
உடனே பங்குபெறுவீர்:
தமிழ் T -shirt வாசகம்/ வடிவம் போட்டி - "வில்வா"
1. தமிழ் வாசகங்கள் சமர்ப்பிக்கலாம்.
2. தமிழ் ஆடை வடிவங்கள் (Designs) சமர்ப்பிக்கலாம்.
வாசகங்கள் கவிதையாகவும் இருக்கலாம், பெருவாரியான மக்களை ஈர்க்கும் படியாக இருத்தல் வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு - +91-9551789459.
அம்மா...
நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.
என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.
கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.
என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.
இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போ (...)
அம்மா...
நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.
என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.
கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.
என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.
இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போ (...)
பாவத்தின் சம்பளம் ,
மரணமாம் ..
உன் வயிற்றில் ,
பிறந்த பாவத்திற்கே ..
பரிசாக ,
மரணம் தந்தாயோ ..???
வயிற்றில் உள்ளது ,
பெண் என்று அறிந்தே ..
இடையில் கலைத்தால் ,
உன் உயிர் போகும் என்றே ..
பத்து மாதம் ,
பத்திரம் காத்து ..
கொன்று ,
தூக்கி எறிந்தாயோ - என்னை
கொசுக்கள் மொய்க்கும் ,
குப்பை தொட்டிதனில் ..???
நீ ,
பெண் என்பதையும் ..
உன்னை பெற்றவள் ,
பெண் என்பதையும் ..
உன்னுடன் பிறந்தவள் ,
பெண் என்பதையும் மறந்தே ..???
வயிற்றிலிருந்து ,
வெளியேறிய அசதியில் ..
என் ,
பிஞ்சு விரல் கொண்டு ..
உன் ,
மார் தடவினேன் ..
தீண்டத்தகாதவள் போல ,
தர மறுத்துவிட்டாய் - சரி
உன் ,
இளைஞர்களிடையே தமிழ் உணர்வு குறைந்ததற்கு இவர்களில் யார் காரணம்?
பார்த்ததில் பிடித்தது !
திரைப்படங்களைப் பாருங்கள். அவற்றில் நல்ல கருத்து மிகக் குறைந்த அளவில் தான் இருக்கும். அவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பாருங்கள் ரசியுங்கள் அத்தோடு மறந்துவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள். முன்னேறும் வழியைப் பாருங்கள் . சினிமாவால் உருப்பட்டவர்களைவிட கெட்டவர்களே அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெறித்தனமாக இருக்கக் கூடாது.. பாலபிஷேகம் முதலியவற்றைச் செய்து அவர்களை உயர்த்தக் கூடாத உயரத்துக்கு உயர்த்த வேண்டாம். அவர்கள் உங்களால் பிழைக்கிறார்கள். நீங்கள் அவர்களால் பிழைக்கவில்லை
குடிச்சா, அரசாங்கத்துக்கு வருமானம்...
போதைல வண்டி ஓட்டுனா போலீஸுக்கு வருமானம்...
அடிபட்டா ஆஸ்பத்திரிக்கு வருமானம்...
குடிக்றவனுக்கு செலவும் அவமானமும்
உலகை மறந்து உறக்கம் தேடும் தோழா!
உறக்கம் களைந்து மேலெழுந்து
சோம்பல் உடைத்து சுயம் நாடு!
கடமை உணர்ந்து கடைபிடித்து
உன்னை அறிந்து உயரே எழு!
இலக்கைக் குறித்து திட்டமிட்டு
திட்டத்தின் வழி செயல்படு!
இடரும் பிழைக்கு பிழைத்து
தடுமாறும் தவறுக்கு தப்பித்து
நேற்றை மறந்து நாளை நோக்கி
வீரமாய் நடை போடு தோழா!!
ஓங்கிய சிகரத்திற்கும் இமயமாய் காட்சியளிப்பாய்!!!
தோல்வியிலும் துன்பத்திலும் துவண்டு கிடக்கும் தோழனே!
துரத்துவது துயரமானாலும் மரணமானாலும் துணிந்து நில்!
எத்தனைமுறை விழுந்தாலும் நம்பிக்கையுடன் எழுந்து நில்!
காற்றை கிழித்துக்கொண்டு உயரப்பறக்கும் கழுகென உயர்ந்து செல்!
வெறியுடன் வேட்டையாடும் புலியென பாய்ந்து செல்!
வென்ற பின்பும் வேட்கை குறையாமல் உன் வெற்றியை உரக்கச்சொல்!
வெற்றியை ருசிக்கும் போதுதான் உன் வியர்வையும் இனிக்கும் உனக்கு!!!