தோற்றினும் முயற்சி செய்

தோல்வியிலும் துன்பத்திலும் துவண்டு கிடக்கும் தோழனே!
துரத்துவது துயரமானாலும் மரணமானாலும் துணிந்து நில்!
எத்தனைமுறை விழுந்தாலும் நம்பிக்கையுடன் எழுந்து நில்!
காற்றை கிழித்துக்கொண்டு உயரப்பறக்கும் கழுகென உயர்ந்து செல்!
வெறியுடன் வேட்டையாடும் புலியென பாய்ந்து செல்!
வென்ற பின்பும் வேட்கை குறையாமல் உன் வெற்றியை உரக்கச்சொல்!
வெற்றியை ருசிக்கும் போதுதான் உன் வியர்வையும் இனிக்கும் உனக்கு!!!