தோற்றினும் முயற்சி செய்
முயற்சி செய் - தோற்றினும் முயற்சி செய்
வாழ்க்கை என்னும் புத்தகத்தில்
தோல்வி என்ற பக்கங்கள்
வரலாறாய் வாசிக்கப்படுவதும்
வெறுமையாய் புரட்டப்படுவதும்
அதை தொடர்ந்து பின்னேவரும்
வெற்றி என்ற பக்கங்களை பொறுத்ததே...!
முயற்சி செய் - தோற்றினும்
முயற்சி செய்.....!
தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே
தோல்வியைக் கண்டு தளர்ந்து விடாதே
இங்கு வெற்றி என்ற ஊருக்கு போக
தோல்வி என்ற முகவரி பலருக்கு தேவை.
அதை வெற்றிக்கு வழிகாட்டி ஆக்குவோம்
அதை வெற்றிக்கு படிக்கட்டு ஆக்குவோம்...!
முயற்சி செய் - தோற்றினும்
முயற்சி செய்.....!
முயற்சி என்பதை கைவிட்டிருந்தால்
ஈரெட்டொருமுறை தோற்றும்
வென்றிருக்கமாட்டான் அந்த முகமது...
வென்றதாலோ என்னவோ...!
ஈரெட்டொருமுறை தோற்றான்
என்று படித்த கணமே,
தொடர்ந்து வெற்றி கொண்டான்
என வரலாறு படிக்கிறோம்...
முயற்சி செய் - தோற்றினும்
முயற்சி செய்.....!
வெற்றி பெற்றவன் வாழ்த்தப்படும் போது..
தோல்வி அடைந்த நீ வருத்தப்பட்டு விடாதே...
ஏனெனில் நீ செதுக்கப்படுகிறாய்..
வடிக்கப்படுகிறாய்..பக்குவப்படுகிறாய்..!
தோல்விகண்டு, முயன்று வென்றவர்கள்
பக்குவப்பட்ட பவிழங்கள்...!
செதுக்கப்பட்ட சிற்பங்கள்...!
இதில் அனைவருக்கும் இடம் உண்டு
தோற்றாலும் முயன்று வெல்லும்போது...!
முயற்சி செய் - தோற்றினும்
முயற்சி செய்.....!
தோல்வி அடைந்தவனும் ஒரு
விதத்தில் வென்றவனே...!
அதிலிருந்து ஒன்றை கற்றுக்கொண்டு
அதை தோற்கடிக்கும் போதும்,
அந்த தோல்விக்குகூட முயற்சி
இல்லாதவரோடு ஒப்பிடும்போதும்...!-ஆக
வென்றவன் பெறுவதோ ஒரு வெற்றி
தோற்றவன் பெறுவதோ இரு வெற்றி
என எண்ணி, விடாமல் மீண்டும்
முயற்சி செய் - தோற்றினும்
முயற்சி செய்.....!
கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புதுவேர்கள் போடும்
என்று சொன்னவனுக்கேற்ப
கல் அளவு தடைகள் தடுமாறச் செய்தாலும்
புல் அளவு விதை வேர்கள் போதும்
அவற்றை தகர்த்தெறிய...!
முயற்சி செய் - தோற்றினும்
முயற்சி செய்.....!
நாணயத்திற்கு இரு பக்கம் உள்ளது போல்
வாழ்க்கைக்கும்
வெற்றி தோல்வி என இரு பக்கமுண்டு..
வெற்றி இன்றி தோல்வி இல்லை..
தோல்வி இன்றி வெற்றி இல்லை..
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகே
என்று எண்ணி முயற்சி செய் - தோற்றினும்
முயற்சி செய்.....!
தோல்விகளைத் தாங்கி, தன்னம்பிக்கை
தளராமல் கவனத்தையும் வேகத்தையும்
உன்செயல்மீது செலுத்து.-வெற்றி
உன்னை நோக்கி வேக ஓடி வரும்.
முயற்சி செய் - தோற்றினும்
முயற்சி செய்.....!
மேகக்கூட்டங்களாய் தோல்விகள் வந்தாலும்
குளிர்காற்றாய் விடாமல் முயற்சி வீசி
மழைச்சாரலாய் வெற்றி அடைவோம்...!
முயற்சி செய் - தோற்றினும்
முயற்சி செய்.....!
வேக முயலையும் ஆமை வெல்லும்
விடாமல் முயலும் போது. ஆனால்
முயலாமை ஒருபோதும் வெல்லாது...
முயற்சி செய் - தோற்றினும்
முயற்சி செய்.....!
உளிவலி என்னும் தோல்விவலியை
தளராமல் தாங்கி, விடாது முயன்றால்
சிற்பம் என்னும் வெற்றியை அடையலாம்..!
தயாராக இரு..தோல்வி வலி தாங்க...!
அதோடு,முயற்சி செய் - தோற்றினும்
முயற்சி செய்.....!
ஏதோ ஒரு தருணத்தில் தன முயற்சியில்
ஒரு தோல்வியும் இல்லாமல் உருவான
வல்லுனர்கள் எவருமிலர் இங்கே....!
முயற்சி செய் - தோற்றினும்
முயற்சி செய்.....!
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்
என்று எழுதி வைக்கப்பட்டு
உணரப்பட்ட உண்மை போல,
விடாமல் முயலும் போது-
பலமுறை தோல்வி கண்டவன்
ஒரு முறையேனும் வெல்வான்..
என்பது எழுதப்படாமல்
பலரால் உணரப்பட்ட உண்மை..!
முயற்சி செய் - தோற்றினும்
முயற்சி செய். நீயும் உணர்வாய்....!
-சே.வினோத் குமார்
4 ஆம் ஆண்டு,
மின்னணுவியல் பிரிவு,
தமிழ்நாடு பொறியியல் கல்லூரி,
கருமத்தம்பட்டி,
கோவை-641659.