வகுப்பறை
என்றும் குருவிற்கு நிகரில்லை
எதிலும் குருவின்றி நிறைவில்லை
என்று எண்ணி வகுப்பறையில்
அமரு வாழ்க்கை வசந்தமாகும்.
எப்போதும் அமைதியாய் இரு
எல்லாம் இருந்தும் அமைதியாய்
இருக்கும் நூலகம் போல.
வகுப்பறை என்றுமே
முட்டாளையும் படிப்பளியாக்கும்,
அறிவாளியையும் மேதையாக்கும் .
உனக்கு தெரிந்தது ஒன்றுமில்லை
அதை தெரிந்துகொள்ள வகுப்புக்கு செல்
அப்போது தான் யாதும் அறிந்தவனாவாய்.
வகுப்பில் கேள்விகேட்க தெரிந்தவனாகு
அப்போதே பாதி புரிந்தவனாகிறாய்.
அறிவின் சாவி எவ்வாயிலையும் திறக்கும்
அச்சாவி வகுப்பறையில் மட்டுமே இருக்கும்
அங்கு சென்றால் மட்டுமே உனக்கு கிடைக்கும்.
கற்கும் மாணவர் என கவரும் உன்னை
கற்றறிந்தான் என்னிடத்தில் என்பதற்கு.
உனக்கென தனியே உயர்வென மதிக்கும்
ஓரறை வேண்டுமெனில்,
உனக்கென அமைந்த பயிலும் பருவம்
கொண்டு நீ தொடரும் அறை எதுவோ?,
அதுவே உன் வகுப்பறை.
முதலில் வகுப்பறையில் அமருபவனாகு
பிறகு வகுப்புகளை கவனிப்பனாகு
முடிவில் வாழ்க்கையில் உயர்ந்தவனாவாய்..........