நாளைய சமுதாயம்

நீ காணவிரும்பும் மாற்றத்தின்
முதல் தொடக்கம் உன்னிடமே.
உலகில் நாம் செய்யும் மிக நல்ல பயணம்
ஒருவரை நோக்கி ஒருவர் செல்வதே.
எரிகிற விளக்காக இரு அப்போது தான்
மற்ற விளக்குகளை ஏற்ற முடியும்.
பிறர் பாரத்தை தாங்க கை கொடுப்பவனாகு,
உன் பாரத்தின் கணம் தானே குறையும்.
எல்லோருக்கும் செவி கொடுப்பவனாகு, ஆனால்
சிலருக்கு குரல் கொடுப்பவனாகு.
கண் காணா கடவுளை மதிப்பவனாகாதே,
கண் காணும் மனிதனை மதிப்பனாகு.
ஒருவருக்கு உணவளிப்பவனாகாதே,
அதி தேடிக்கொள்ள வழிக்காட்டுபவனாகு.
சரித்திரம் படிப்பவனாய் இரு தவறில்லை,
சரித்திரம் படைக்கதவனாய் இருப்பதே தவறு.
நாளைய சமுதாயம் நீயென மெய்யானால்
உன் ஒழுக்கம் நாட்டின் கவலைக்கு எதிரி,
உன் அறிவு நாட்டின் குழப்பத்திற்க்கு எதிரி,
உன் துணிவு நாட்டின் அச்சதிற்க்கு எதிரி.
நாளைய சமுதாயம் இளைய தலைமுறை
என்பது உண்மையானால்,
தன்னம்பிக்கை கொள்பவனாகு
இளைமை என்றுமே குன்றது...............
ரோவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப்பகல்லுரி
எலம்பலூர் ,பெரம்பலூர்

எழுதியவர் : ப. கலியமூர்த்தி (17-Nov-14, 3:24 pm)
சேர்த்தது : Kaliyamoorthy
பார்வை : 569

மேலே