வேலையில்லா பட்டதாரி

படித்தோம், முடித்தோம், வேலைசெல்ல துடித்தோம்;
விண்ணப்பித்து விண்ணப்பித்து வெறுத்ததால் ஒடிந்தோம்;
திறமைக்கு மதிப்பில்லை, வறுமைக்கு வாய்ப்பில்லை;
பணக்காரன் சொல்லுக்கு மேலிங்கே வேறில்லை;
மோதிப்பார்க்க துணிவுண்டு, வென்றுகாட்ட வலிவுண்டு;
காத்திருந்தே களைத்துவிட்டோம், விதிவழி விடுமென்று;
பிச்சையெங்கள் பணியில்லை, பணிப்பிச்சை எடுக்கின்றோம்;
குமுறல்களை புதைத்துவிட்டு சிரித்தேதான் நடிக்கின்றோம்;
சொல்லிவிட எண்ணமில்லை, வந்துவிட்ட தெல்லைமீறி;
உலகெமெக்கு இட்டபெயர், "வேலையில்லா பட்டதாரி"..!

எழுதியவர் : அ ஜோயல் சாம்ராஜ். (17-Nov-14, 5:09 pm)
பார்வை : 230

மேலே