அ ஜோயல் சாம்ராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அ ஜோயல் சாம்ராஜ்
இடம்:  மூன்றாமாண்டு, எந்திரவியல
பிறந்த தேதி :  29-Sep-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Nov-2014
பார்த்தவர்கள்:  294
புள்ளி:  9

என்னைப் பற்றி...

தமிழ் ஆர்வலன், இசை விரும்பி...

என் படைப்புகள்
அ ஜோயல் சாம்ராஜ் செய்திகள்
அ ஜோயல் சாம்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2014 6:09 pm

நடையழகு, உடையழகு,
பாயும்பார்வைக் கணையழகு;
சுருள்விழுந்த சிகையழகு,
முத்துப்பல் நகையழகு;
சிலநிமிடப் பகையழகு,
நீபேசும் வகையழகு;
வெட்கப்பட்டு போகும்படி,
பார்க்கும்குறும்பு விழியழகு;
கெஞ்சலோடு கொஞ்சியெந்தன்,
மனதைமாற்றும் மொழியழகு;
ஒளிந்துவந்து கரங்களுக்குள்,
எனைவளைக்கும் பிடியழகு;
காதுமடல் கடிக்கையிலே,
குத்தும்மீசை முடியழகு;
உன்மூச்சை நானுணர,
ஒட்டிநிற்கும் நிலையழகு;
முத்தமிட மாட்டாயா,
எனத்தவிக்கும் நினைவழகு;
நேரம்போவ தறியாமல்,
சாய்ந்துபேசும் தோழழகு;
இடையில்நான் தூங்கிவிடின்,
மடிநீட்டும் காலழகு;
தூங்காமல் என்துயில்நீ,
இரசித்திருக்கும் இரவழகு;
இருவருக்கும் கடவுள்தந்த,
காதலென்

மேலும்

காதலழகு! சொன்னவிதம் அழகு! வரிகள் அழகில், இன்னுமின்னும் மிளிரட்டும்.. 14-Dec-2014 9:38 am
அருமை :) 17-Nov-2014 7:23 pm
அ ஜோயல் சாம்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2014 5:59 pm

ஆண்கள்பெண்கள் பயின்றுவந்த மேல்நிலைப் பள்ளியதில்,
புதிதாயொரு தேவதைதான் அன்றுவந்து சேர்ந்தது;
பன்னிரெண்டாம் வகுப்பினிலே நானுமங்கு மாணவன்தான்,
மதிமுகத்தைக் கண்டதுமேன் மதிமயங்கிப் போனது;

வகுப்பறைக்குள் அவள்காலை வைத்தஅம் மாத்திரமே,
நெஞ்சறைக்குள் வலக்காலை பதித்துஅவள் புகுந்திட்டாள்;
கண்களை ஈர்க்கின்ற காந்தமாக நடந்தவள்,
சரியாயென் பக்கவாட்டில் தன்னிருக்கை தேர்ந்திட்டாள்;

அன்றிருந்து நூல்நோக்க என்நெஞ்சம் ஒப்பவில்லை;
அவளசைவு ஒன்றும்என் பார்வைக்குத் தப்பவில்லை;
அவள்செல்லும் இடமெல்லாம் தூரத்தில் நான்தொடர,
என்னையவள் கவனிக்க வெகுகாலம் ஆகவில்லை;

இருந்தபின்னும் இப்படித்தான் என்நாட்கள் நகர்ந்

மேலும்

கவியும் கதையும் மனதைத் தொட்டது தோழரே.. வாழ்த்துக்கள்.. 17-Nov-2014 7:26 pm
அ ஜோயல் சாம்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2014 5:24 pm

வானின்று தரைவந்து நடந்த வெண்ணிலவொன்று,
நீராட வருகையிலே கண்டதென் கண்ணின்று;

ஆணொருவன் இருப்பதை அறியாத பேதையாய்,
நங்கையவள் நதிநீரில் மென்பாதம் இறக்கிட்டாள்;

நீராட மேலாடை தடையென்றொ என்னவோ,
மெய்மறைத்த மெல்லாடை சட்டென்று விலக்கிட்டாள்;

அவள்கொண்ட பெண்மைதனை உள்ளாடை மறைத்துநிற்க,
இமைக்காத கண்ணிரண்டை வலிந்துநான் திருப்பிட்டேன்;

அந்நியரின் அந்தரங்கம் அறிவதழ கல்லவென்று,
அமர்ந்திருந்த பாறைவிட்டு எழுந்துசெல்ல முற்பட்டேன்,

வெகுஅருகில் வேங்கையொன்று அவளின்பின் வந்துநின்று,
பாயக்குறி பார்ப்பதைக் கண்டுநானும் திடுக்கிட்டேன்;

தலைகாலும் புரியாமல், செய்வதொன்றும் அறியாமல்,
இடையிருந்த உடைவாளை

மேலும்

கதைக்கவி நன்று! மென்மேலும் சிறக்க, நல்வாழ்த்துக்கள்... 14-Dec-2014 9:36 am
அழகான படைப்பு :) 17-Nov-2014 5:29 pm
அ ஜோயல் சாம்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2014 5:19 pm

பள்ளி வந்த தோழியவள் விதைத்துவிட்டாள் காதல் விதை,
விதை முளைத்துப் பூத்தும் நான் சொல்லவில்லை காதல் கதை,
சொல்லுமெண்ணம் வந்தபோது கன்னியவள் காணவில்லை,
தேவதையைக் கண்டபோது சொல்ல மனம் ஒப்பவில்லை,
நாட்கள் பல கழிந்து விட, தேர்வுகளும் முடிந்து விட,
சொந்த வீடு திரும்பி வர, பெற்றோரின் அழைப்பு வர,
தங்கியிருந்த மாமன் வீட்டில் சொல்லிக் கொண்டு நான் கிளம்ப,
எதிர்வீட்டில் குடியிருந்த என்னவளும் விடை வழங்க,
என்னைமீறி வந்தவொன்றை சொல்லிவிட முற்பட்டேன்,
சிரமப்பட்டு அடக்கிவிட்டு கையசைத்துப் புறப்பட்டேன்;
இரயிலெறக் காத்திருந்த இடைவெளியில் நான் குமுற,
உள்ளம்கீறி அவளுக்குக் காட்டிவிட மனம் திமிற,
வந்த இரயில் ஏ

மேலும்

எத்தனை அழகு..! 17-Nov-2014 5:31 pm
மேலும்...
கருத்துகள்

மேலே