நானும் போராளிதான்

நானும் ஒரு போராளிதான்.

நானும் ஒரு போராளி மனிதனோடு தான்.
வேணும் அவன் சீராளன் மனத்தினோடு தான்.
தோற்றுத் தோற்று வீழ்ந்தாலும் தோற்கவில்லை நான்.
நேற்று இன்று மாற்றம் பார்த்து வேர்த்திருக்கிறேன்..

இறைவன் என்பான் இருக்கிறானா இல்லையா ஏன்?
மனிதன் என்பான் இருக்கிறானா இல்லையா காண்.
அவனிருந் தாலென்ன இல்லை என்றால் என்ன?
இவனிருந் தாலிருப்பான் அவனும் சிரிப்பான் முன்ன.

கடவுள் என்று சொன்னால் சிலருக்கு அறிவு
கடலுக்குள் பொங்கும் தன்னால் சுனாமி விரைவு.
அவனால் ஆகிய அனுபவ நட்டம் என்ன மனிதற்கு.
அறிவாளி என்றிவர் அடையும் பட்டம் பகுத்தறிவு.

மனமென்னும் அறிவுள் மறைந் திருக்கும் மனச்சாட்சி
மனச்சாட்சி அதுதான் மனம் ஆளும் இறைமாட்சி.
மனங்கொண்டு தேடினால் வெளிப்படும் தான் சுயக்காட்சி
மனத்தினை தொலைத்ததால் மனிதனும் தான் தொலைந்தாச்சு.

இல்லையன்றே சொல்வா ரெல்லாம் இருப்பானென்றே தேடுகிறார்.
சொல்லும்போதும் அஞ்சும் நெஞ்சில் உறுத்தலொன்றில் கூடுகிறார்.
எதற்கு இந்த ஆராய்ச்சியெல்லாம் இதனாலென்ன பயனுண்டோ!
இதயம் ஒன்றில் நேராய்ந்தெல்லாம் அதனில்எண்ண நயனுண்டே!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (16-Nov-14, 7:13 pm)
பார்வை : 175

மேலே