என்னை கொன்றுவிடுங்கள்

கனவென்னும் ஓடத்தில்
பயணிக்கும் கற்பனையை
காலமென்னும் காமுகன்
சிறைபிடிக்கும் முன்
என்னை கொன்றுவிடுங்கள் !!

காதலையும் காமத்தையும்
கருவாக்கி கவிதையாக்கியும்,
கவலையற்று மானுடம் தழைக்க
பாட்டிசைக்காவிடின் - கவிஞன்
என்னை கொன்றுவிட்டுங்கள் !!!

வடுக்கள் நிறைந்த
வறியவனின் வாழ்கையை
வருமையினின்று மீட்க
வலிமையில்லா ஆளுமை நான்
என்னை கொன்றுவிடுங்கள் !!

சாதியம் மதமும் சேர்ந்து
சாபமாய் சோகமாய் -என்
சமுதாயத்தை சீர்குலைக்க
சுயநலமாய் மௌனமாய் நிற்கிறேன்
என்னை கொன்றுவிடுங்கள் !!

தங்க திருநாட்டின் தொப்புள்கொடிகள்
தங்க இடமின்றி முள்வேலிக்கு பின்னிற்க
தன்மானம் தவிர்த்த
தமிழன் நான்
என்னை கொன்றுவிடுங்கள் !!

எழுதியவர் : (16-Nov-14, 9:16 am)
பார்வை : 858

மேலே