உன்னை சிந்தித்தால்

பிறந்தோம், இருந்தோம், வாழ்ந்தோமென எண்ணும் வீணனே!
நானும் ஒருமுறை வென்றுவிட்டேனென மார்தட்டும் வீரனே!
ஒருமுறை உன்னை நீ சிந்தித்தால்!

நேரமே போதவில்லை என பிதற்றும் பித்தனே!
நேரமே போவதில்லை என் செய்ய என புலம்பும் மூடனே!
ஒருமுறை நீ உன்னை சிந்தித்தால்!

கடமை மறந்து காலம் போக்கும் கசடனே!
திறமை இருந்தும் வாய்ப்பில்லையென பேசும் பேதையே!
நீ உன்னை சிந்தித்தால்!

உனக்கே உரிதான உள்ளார்ந்த சக்தியை உணர்ந்தால்
உன் பிறப்பிற்கும் மகத்தான அர்த்தம் சேர்ப்பாய்!
ஒவ்வொரு முறையும் வென்று சரித்திரம் படைப்பாய்!
சுழலும் பூமியை விட வேகமாய் செயல்படுவாய்!
கற்பனைக்கும் எட்டாத சாகசங்களை சாதாரனமாய் செய்திடுவாய்!
காலத்தின் அருமையறிந்து கடமையை ஆற்றிடுவாய்!
வாய்ப்புகளை உருவாக்கி வளமாய் செழித்திடுவாய்!
தோழனே நீ உன்னை அறிந்தால்!

எழுதியவர் : மு. பாலவேலாயுதம் (15-Nov-14, 11:33 pm)
பார்வை : 117

மேலே