ஒரு துளி கள்ளிப்பாலை சுவைக்க கூடவா நான் அருகதையற்றவள்
![](https://eluthu.com/images/loading.gif)
பாவத்தின் சம்பளம் ,
மரணமாம் ..
உன் வயிற்றில் ,
பிறந்த பாவத்திற்கே ..
பரிசாக ,
மரணம் தந்தாயோ ..???
வயிற்றில் உள்ளது ,
பெண் என்று அறிந்தே ..
இடையில் கலைத்தால் ,
உன் உயிர் போகும் என்றே ..
பத்து மாதம் ,
பத்திரம் காத்து ..
கொன்று ,
தூக்கி எறிந்தாயோ - என்னை
கொசுக்கள் மொய்க்கும் ,
குப்பை தொட்டிதனில் ..???
நீ ,
பெண் என்பதையும் ..
உன்னை பெற்றவள் ,
பெண் என்பதையும் ..
உன்னுடன் பிறந்தவள் ,
பெண் என்பதையும் மறந்தே ..???
வயிற்றிலிருந்து ,
வெளியேறிய அசதியில் ..
என் ,
பிஞ்சு விரல் கொண்டு ..
உன் ,
மார் தடவினேன் ..
தீண்டத்தகாதவள் போல ,
தர மறுத்துவிட்டாய் - சரி
உன் ,
மடியினில் கொண்டு ..
ஒரு துளி ,
கள்ளிப்பாலை சுவைக்க கூடவா ..
நான் ,
அருகதையற்றவள் ..???
நீ ,
என்னை தூக்கி எறிந்த ..
குப்பை ,
தொட்டியில் ..
வேகமாக கிளறிய ,
நாய் ஒன்று ..
என் ,
நிலை கண்டு ..
கருணை ,
கொண்டு ..
நான் ,
அருந்துவேன் என்று ..
தன் மார்பினை ,
என் வாயினில் கொண்டதடி ..
நான் இறந்த ,
செய்தி கூட அறியாமல் ..
அந்த ஐந்தறிவு ,
உயிருக்கு உள்ள பாசத்தில் ..
ஒரு ,
துளி கூடவா ..
என்னை பெற்ற ,
உனக்கு இல்லை ..???
இருபது நிமிட ,
இச்சைக்காக ..
என்னை ,
பெற்று எடுத்து ..
காலனிடம் ,
விற்றது நியாயமா ..??
அப்படி நான் செய்த ,
பாவம் தான் என்ன ..??
உன் வயிற்றில் ,
பிறந்ததை தவிர ..
இறுதி ,
சடங்கிற்கு கூடவா ..
நான் ,
இணை இல்லாதவள் ..???
இறந்தும் வலிக்குதடி ,
இதயம் ..!!!
-- கற்குவேல் . பா --