இது இவங்க பாடம்
கணக்கு பாடம் -என்றால்
நல்லாவே காதலை கணக்கு
பண்ணுகிற வயசு
கூட்டவும் தேவையில்லை
கழிக்கவும் தேவையில்லை
பள்ளிக் காதல்
படலை வரை என்றால்
வாங்கு முழுவதும்
இதயமும் அம்பும்
இணைத்திடும் பெயருகளுடன்
பசியும் அடங்காது
பாடமும் ஓடாது
பார்வைகள் மட்டும்
பரீட்சை வரை எட்டும்
மனதுக்குள்ள -பல
குழப்பங்களோட
கவிதையும் தாறு மாறா
பாயும் அருவி போல
சொல்லத் துடிக்கும் -அருகில்
செல்ல இனிக்கும்
நாவும் பட ஏங்கும்
விழிகளும் மோத முந்தும்
பார்ப்பதும் அழகாய் தோனும்
வாத்தி திட்டினாலும் -காத
பொத்தி வைப்பாங்க சட்டைப் பையில்
பெத்தவங்களுக்கு ஒரு பூ காதில -வீட்ல
பத்தி வைப்பவங்களுக்கு கேட்டதெல்லாம்
தட்சணையாய் வழங்க
காசு இல்லாட்டியும்
பணக்காரர் மாதிரி பந்தா
அறிவுரையும்
சலித்துப் போகும்
ஆசையோ கூடிப் போகும்
எதிரி வந்தாலும்
எதுத்து நிக்க தோனும்
அடி வாங்கினாலும்
சீனுக்கு அளவேயில்லை
சீப்பில்லாம தலை கோதும் போது
பார்த்தும் பார்க்காமலும்
கதைக்க எண்ணும் பல நினைவுகள்
கற்பனையோ கடலு வரை பாயும்
காதலோ பள்ளிக் காலம் முடியும் வரை
ஒருவர் அன்பை நாடும் .....
(இது யாவும் கற்பனையே ) ஹா ஹா