காற்றில் மிதக்கும் இறகு - தேடல் – 15
பட படவென
அடித்தது பறவை
விரித்தது சிறகினை
மேலே எழுந்தது
வானம்
வந்தைடைந்தது
அங்கும் இங்கும்
அலைபாய்ந்து
திரிந்தது
சூறைக்காற்று
அடித்த
வேகத்தில்
பிரிந்தது
ஓர் இறகு
இறக்கை தன்னை
என் கூட்டம்
பிரிந்தேன்
தடம் பெயர்ந்தேன்
தவித்துத் தத்தி
மிதந்தேன்
காற்றின் போக்கினிலே
நான் ஈர்பேன்
உன்னை
என்றுழுத்தாள் மண்மாதா
அன்னை என
வந்தாள்
என்று நான் எண்ண
பக்கவாட்டில் ஒரு
பேரிறைச்சல்
விமானம் ஒன்று இறங்க
பேரிடியோ என
பேதலித்தேன்
நானும் பயந்து
பாலகன் ஒருவன்
ஜன்னல் வழியே
கைகாட்டிச் சிரித்தான்
விசையின் காற்றில்
மேகத்திலே
மீண்டும்
மேலும் கீழும்
வீழ்ந்து
சரிந்து
எங்கு செல்வோம்
என்றஞ்சி
நிலைகுலைய
விட்டிலென நினைத்து
குருவி ஒன்று
கொத்த
கவ்வியது தவறு
என்று
அது எண்ணி
விட்டது என்னை
அடிசில்
விளையும் வயலிலே
வந்தது வந்தாய்
பயனுற
வந்தாய்
உரமாய் இருப்பாய்
மற்றவர்
உணவில்
இனியவே பகர்ந்தாள்
அருமை
அன்னை பூமி