என் அம்மா
என் அம்மா .
அந்த கால அம்மாக்கள் அப்படித்தான்.
அம்மாக்களின் உணர்வுகள் என்ன என்பதை அருகிருந்து கேட்கணும்.
ஸ்கூல் படிக்கிறப்போ இருந்து அவளிடம் பேசத் தொடங்கினேன்.
அடுத்திருக்கிற எல்லாருடைய தேவைகளையும் நிறைவு செய்றோம். காதலிச்சா காதலி, மனைவி பிள்ளைங்க ஏன் நண்பர்கள் கிட்டக்கூட கூட பிடித்தத்தை தெரிந்துகொண்டு செய்றோம், போஸ்ட் போடுறோம் .
வீட்டுக்கு வந்த விருந்தாளிகளைக் கூட விழுந்து விழுந்து உபசரிக்கிறோம்.
ஆனா அம்மாக்களை மறந்திடறோம்.
அந்த கால அம்மாக்கள் இன்ட்ரோவெர்ட்டுகளோ இல்லையோ பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் அப்படி நடத்தப்பட்டாள்கள் என்பதே உண்மை.
காரணம் அவள்கள், சுற்றம் மற்றும் சொந்த பந்தத்திற்குக் கொடுத்த வேலியூ. தெரியாத சூழல்களை அட்ஜஸ்ட் செய்து வாழ்வது என்பது அவளுக்கான அழுத்தம் . அந்த அழுத்தத்தை பட்டமென திணித்தார்கள்.
அதிலிருந்து முற்றிலும் விலகியிருந்தாள் என் அம்மா , அந்த காலத்திலேயே டபுள் க்ராஜுவேஷன், சங்கீதம் எல்லாமென, ஆனால்
அவள் பிறந்த வீட்டில் அவளுக்கு தோட்டக்கலை மட்டுமே விருப்பம்.
எங்க வீட்டுக்கு வந்தப்றம் அவளை அப்படி பார்க்க முடியல .
காலம் வேகமா ஓடிருச்சி, அக்காவும் நானும் வளர்ந்துட்டோம். அப்போ நான் போர்டிங் ல இருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருக்கேன்.
ஒருநாள் வாசற்படியில் அமர்ந்து
நியூஸ் பேப்பரில் கையெழுத்துக் கிறுக்கிக் கொண்டிருந்தாள் அம்மா. அதுவழியே கடந்து போன அக்கா , என்னம்மா பன்ற ன்னுகேக்கறா,
அப்போ அம்மா சொல்கிறாள் "இல்ல நேத்து கொரியர்க்காரன் வந்தான் கொரியரைக் கொடுத்திட்டு
கையெழுத்துப் போட சொன்னான் ,
இங்க வந்துட்டு அதிகக்காலமா
கையெழுத்து போடாமயே இருந்துட்டதால, டச் விட்டுப்போச்சு, அதான் போட்டுப் பார்த்துக்கிட்டிருக்கேன்னு சொல்கிறாள். அன்றைய அக்காவின் வயதிற்கு அம்மாவின் உணர்வு புலப்படவில்லை, எனக்கு ஏனோ புரிந்து கொண்டேன், அன்றிலிருந்து
இன்றுவரை அவளுக்கான நேரம் என்பதை உருவாக்கி கொடுத்திருக்கிறேன்.
டெய்லி பேசிடவும் செய்திடறேன்.
அப்படிப்பட்ட அம்மாக்களுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி பேசினால்தான் என்ன? என்னதான் அவர்கள் எதுவும் சொல்லவில்லை என்றாலும் ? அக்கணம் வேண்டாமெனத் தவிர்த்தாலும் அவள் நமக்கு மெத்தனப்பட்டு பலமுறைக் கேட்டு கட்டாயப்படுத்தி கொடுத்ததை போல, இன்றைய பிள்ளைகள் அவர்களுக்கு செய்வதை தவிர்த்துவிட்டார்கள் என்பதே உண்மை. இன்றைய பிள்ளைகள் ஓரிருமுறை கேட்பார்கள், அவர்கள் வேண்டாம் என்றுவிட்டால் சரி என்று விட்டு விடுவார்கள். வற்புறுத்துவது இல்லை. என்பிள்ளைகள் ஏன் என்னை ஓரிருமுறைக்கு மேல் வற்புறுத்துவதில்லை என்று அவர்களுக்கு எண்ணம் எப்போதாவது எழலாம். எழும்போது அவர்கள் நாம் இவ்வளவுதானா என்று அவர்கால் யோசிக்கக்கூடும் . வெளியிலும் காட்டிக் கொள்ள மாட்டாள்கள் . ஆதலால் பேசுங்கள் பேசுங்கள் பேசிக்கொண்டே இருங்கள் . அவளுக்குத் தெரிஞ்சதைப் பேசுவாள்
கேளுங்கள் , தடுக்கவேண்டாம் , மட்டம் தட்டவேண்டாம், நமக்கு எல்லாம் தெரிந்திருக்கலாம். அவளுக்கு நம் அளவிற்கு உலகம் தெரியாமலும் கூட இருக்கலாம் அதனாலென்ன ஆகிடப் போகிறது. அருகில் உட்கார்ந்து
பேசுங்கள்.
அவள்கள் இறந்த பின்னால் தேடும் அவள்களின் நட்புகளை, அவள்களின் கனவுகளை, பிடித்தங்களைப் பற்றி பேசாமல் உயிருடன் இருக்கும்போதே பேசுங்கள் என்பதே என் ஆலோசனை.
அக்கா கல்யாணமாகிப் போன புதிதில் அவளிடமிருந்து அழைப்புகள் வரும்போதெல்லாம், அம்மா அவளிடம்
கேட்கும் ஒரே கேள்வி "எப்ப வர்ற"
என்பதாகத்தான் இருக்கும். ஏன் எனில் அவ்ளோ பெரிய வீட்டில் அவள் இனி தனித்திருக்கணும். நானும் லீவ் முடிஞ்சு போர்டிங் போயிடுவேன். அப்பாவும்
வேலைக்கு தோட்டம்ன்னு போயிடுவார். ஆனால் ஒவ்வொரு மாலையும் லேண்ட்லைனில் பேசிக் கொண்டே இருப்பேன். நிறைய பேசுவாள் . பேச்சிற்கிடையில் என்னிடமும் "எப்ப வர்ற" என்பதுதான் அதிகமாக இருக்கும். அந்த வெறுமைத் தெரியவேண்டாமென அவள் எத்தனை ஒளித்தாலும் அவ்வப்போது அவள் வெறுமை உடைப்பட்டுப் போய்விடுகிறது. அவளைத் தோற்கவிடக் கூடாதெனவே கடிதமும் கால்டாக்ஸ் எனவும் கடந்தேன். பள்ளிக்கூட இடைவேளையில் பேசவும் என எரிக்சன் வயர்லெஸ் போன் ஒன்றை அப்பாவிடம் சொல்லி வாங்கியிருந்தேன். ஏன் எனில் அவள் வெறுமை என்னில் அத்தனை ஆட்கொண்டது அன்றெல்லாம் .
அதுவரை அவள் அவஸ்த்தைகள் விழுங்கிய பங்கு அந்த வெற்றுச் சுவர்களுக்குத்தான் இருந்தது, அவள் ப்ரியப்பட்டு பார்த்து பார்த்துச் சேர்த்த அந்த தளவாடங்களுக்குத்தான் இருந்த்து. யாரிருந்து என்ன அதற்கு முன்னாலும் அவள் அப்படித்தான் இருந்தாள் . ஆனால் அவள் இருக்கும் சபை நிறைவாக இருக்கும் . ஆம் எல்லோரும் கூடி இருந்தவரை அவள்தான் அந்த சபை நிறைத்திருந்தாள்.
அம்மாக்கள் அன்பை விரையம் செய்து இமோஷனல் ப்ளாக்மெயில் செய்கிறார்கள், தாய்மையை புனிதமாக்க விழைகிறார்கள்,
கட்டுக்குள் வைக்க முயல்கிறார்கள்
அவள்கள் எங்கள் பாதைக்கு
முட்டுக் கட்டையாக தடசமாக இருக்கிறார்கள் என்று வேண்டாததை
எல்லாம் சொல்லி அவள்கள்
மனதைக் கஷ்ட்டப் படுத்திக்
கொண்டிருக்காமல், அந்த அரவணைப்பிற்கு இறைவனிடம்
நன்றி கொள்ளுங்கள்
அவள்களின் அரவணைப்பிற்குள்,
அந்த அன்பின் (Bond) பிணைப்பிற்குள்
இருக்கும்வரைதான் நம் பாதுகாப்பு
உறுதியாக இருக்கும் என்பதை உணர்ந்து அவள் அன்பிற்கு
மரியாதை செய்யுங்கள் .
அவள்களும் நம்மை எப்படியோ போகட்டும் என்று விட்டுவிட்டால், நம் வாழ்க்கை என்றோ தாருமாறாகிப் போயிருக்கும். யாரோ நம்மை வீட்டில்
எதிர்ப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
என்னும் எண்ணம் உள்ளவரைதான்
நம் சுதந்திரத்திற்கு பாதுகாப்பு.
யாரும் நம்மைத் தேடாத இடத்தில்
நம் சுதந்திரத்திற்கே பாதுகாப்பு இல்லை.
அன்பில் பிணைப்பினால் உருவாகியதே உலகம், நாலுக்கால் பிராணியை நேசிக்கிறதாக பதிவிடும் நமக்கு இந்தப்பிறவி முடிந்தால் அடுத்து என்ன என்பது பெரும் குழப்பம் தான்.
ஆதலால் கிடைத்தபிறவியை
கிடைத்த உறவுகளை முடிந்தவரை
நேசித்து வாழ்ந்திருங்கள் .
எவ்வளோ பெரிய வீட்டில் பிறந்து வளர்ந்து, ட்ரஸ்ஸிங் கில் கூட கேர் எடுத்துகிட்டதில்லை எங்க வீட்டுக்கு
வந்தப்றம். உன்னத உயிர் அவள் . உலகத்தில் யாரையும் விடவும் அவள்மேல் அதிகம்
அன்பிருத்தியிருக்கிறேன். ""
இது மீள் பதிவுதான். மறுபடியும் போடணும்னு போடுறேன்.
நன்றி