selvaravi87 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : selvaravi87 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 476 |
புள்ளி | : 14 |
*பெண் என்பவள் வெறும் சதையா..???*
🔸பெண் புடவை கட்டினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
🔸அவள் சுடிதார் உடுத்தினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
🔸அவள் பர்தா போட்டாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
_பெண்ணின் உடையிலும் பிரச்சனை இல்லை.....!_
🔹பெண் ஏழு வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் பதினேழு வயதிலும் கற்ப்பழிக்கபடுகிறாள்,
🔹அவள் எழுபது வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்.
_பெண்ணின் வயதிலும் பிரச்சனை இல்லை.....!_
🔸பெண் இந்துவாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் முஸ்லீமாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் கிறிஸ்தவராக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
_பெண்ணின் மதத்திலும் பிரச்சனை இல்லை.....!_
🔹பெண் தாயாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் மனைவியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் சகோதரியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
_பெண்ணின் உறவிலும் பிரச்சனை இல்லை.....!_
🔸பெண் தமிழச்சியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் வடமொழி பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் ஆங்கிலம் பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
_பெண்ணின் மொழியிலும் பிரச்சனை இல்லை.....!_
🔹பெண் கருப்பாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் வெள்ளை மயிலாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் கொள்ளை அழகாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
_பெண்ணின் நிறத்திலும் பிரச்சனை இல்லை.....!_
*அப்போ எங்கு தான் பிரச்சனை..???*
சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் இல்லையேல் நாம் திருந்த வேண்டும்.....!
சமூகத்தின் மீதும் பெண்கள் மீதும் ஏன் பழிப்போட வேண்டும்..???
ஆண்களுக்கு பெண்களை விட வலிமையை தந்து இருப்பது அவளை காக்கவே தவிர பறிக்க அல்ல.....!
பெண்களை தாயாக சகோதரியாக பார்க்காவிட்டாலும் அவர்களை காமமாக பார்க்காதீர்கள்.....!
இந்த எழுத்துக்கள் கண்ணீர் சிந்தும் என் கண்மணிகளான சகோதரிகளுக்கு சமர்பணம்..!!!_
*சிந்தியுங்கள்... செயல்படுங்கள்...*
ஒரு ஊரில் கடினமாய் உழைக்கும் ஓர் கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான்.ஒரு நாள் அவன் ஒரு பெரிய வியாபாரியின் வீட்டின் முன் சென்று கொண்டிருந்தான்.
வீட்டின் உள்ளே பார்த்தவன் அங்கு அந்த வியாபாரியின் வசதிகளைக் கண்டு பிரமித்தான். நானும் இவனைப்போல் ஒரு வியாபாரியாய் இருந்தால் எத்தனை பெரியவனாய் இருப்பேன் என்று நினைத்தான்.
உடனே அவனும் ஒரு பெரிய வியாபாரியாய் மாறி விட்டான்.
இன்னொரு நாள் ஒரு அரசாங்க அதிகாரியைக் கண்டான். அதிகாரிக்கு பணக்காரர்கள் முதல் எல்லாரும் பயப்படுவதைக் கண்டதும், நானும் அதிகாரம் கொண்ட ஒரு அரச அதிகாரியாய் இருந்தால் அதுதான் பெரிது என்று நினைத்தான்.
உடனே அரசாங்க அதிகாரியாக மாறிவிட்டான்.
வெளியில் அதிகாரி நடந்து கொண்டிருக்கும் போது, சூரியனின் தகிப்பு தாங்க முடியவில்லை. ஆகவே சூரியன்தான் மிகவும் சக்தி வாய்ந்தது. நான் சூரியனாய் இருக்கக்கூடாதா என்று நினைத்தான்.
சூரியனாகவே மாறிவிட்டான்.
சூரியன் பூமி மேல் பிரகாசிக்க முடியாதவாறு கருமேகங்கள் சூழ்ந்ததைக் கண்டான். உடனே மேகத்தால் சூரியனை வெல்ல முடிகிறதே. நான் மேகமாக மாற வேண்டும் என்று நினைத்தான்.
உடனே மேகமாய் மாறிவிட்டான்.
அந்த மேகத்தை வழிநடத்தும் காற்றைக் கண்டதும், காற்றுத்தானே பலம் வாய்ந்தது. நான் காற்றாக மாற வேண்டும் என்று நினைத்தான்.
காற்றாக மாறினான்.
காற்று பயணிக்கும்போது எதிர்ப்படும் மலையை காற்றால் அசைக்க முடியவில்லை. மலைதான் மிகவும் பலம் வாய்ந்தது எனவே மலையாக மாற வேண்டும் என்று நினைத்தான்.
அதன்படியே மலையாகவும் மாறிவிட்டான்.
ஒரு நாள் கீழ்ப்பகுதியில் கொஞ்சம் உடைந்து கீழே விழுந்தது. குனிந்து என்னவென்று பார்த்தான் அங்கு ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி கல்லை உளியால் உடைத்துக் கொண்டிருந்தான்.அதைக் கண்டதும், மலையை விடப் பலசாலி கல்லுடைக்கும் தொழிலாளிதான்.
எனவே நான் அவனாக மாற வேண்டும் என்று நினைத்தான்.
பழையபடி கல்லுடைக்கும்
தொழிலாளியாகவே மாறிவிட்டான்..
ஆம்,நண்பர்களே,
இந்தக்கதை நமக்கு தரும் செய்தி என்னவென்றால்,
என்னதான் நம்முடைய மனதை சந்தோசமாக வைத்துகொள்ள நினைத்தாலும் மனம் என்பது ஒரு மாறும் குணமுடைய மனித அங்கமாகும்.
அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று கூறினார்கள்.
ஊருக்கு ஒதுக்குப்புறம் ஒரு,
வீடு...!
வீட்டின் நடுவே,
அலங்கரித்து வைக்கப்பட்ட,
உயிரற்ற உடல்...!!
ஒரு வீடு...!
ஒரு ஏக்கர் நிலம்...!!
பிரிக்க வந்தவர்களோ...
பத்து பேர்...!
ஒருபுறம் இருக்க,
உடல் சுடுகாட்டை நோக்கி...
பிரயாணித்தது...!
தந்தை ஒரு சாதி...!
தாய் ஒரு சாதி...!!
எரிக்கவேண்டுமாம்...!
தாய் வழியில்,
புதைக்கவேண்டுமாம்...!!
முடிவுக்கு வர...!
எரிக்கவேண்டும் என்று...
ஒரு பிரச்சினை...!!
அனைத்து சடங்குகளும்...
முடிய...!!
பணம் யார் தருவார் என்று...
ஒரு பிரச்சினை...!!!
இத்தனை பிரச்சினைகளுக்கு,
நடுவே உறங்கும் ஆத்மாவிற்கு....
நாம்,
வைத்த பெயர்
காரணமானவர்களுக்கு
நாம்,
வைத்த பெயர் "மனிதன்"
காதல் என்றால் என்ன ? தெளிவுபடுத்தவும் ?
அப்பான்னு நினைச்சேன்
அசிங்கமாய் தொட்டான்....!
சகோதரன்னு பழகினேன்
சங்கட படுத்தினான்......!
மாமான்னு பேசினேன்
மட்டமாய் நடந்தான்......!
உறவுகள் அனைத்தும்
உறவாடவே
அழைக்கின்றன.....!
பாதுகாப்பை தேடி
பள்ளிக்கு சென்றேன்.....!
ஆசிரியனும்
அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண்
குறையும் என்றான்.....!
நட்பு கரமொன்று நண்பனாய்
தலைகோதி தூங்கென்றான்....!
மரத்த மனம்
மருண்டு சுருண்டு
தூங்கையில் கைபேசியில்
படமெடுத்தான்
அவனும் ஆண்தானே .....!
கதறி அழுது கடவுளிடம்
சென்றேன்
ஆறுதலாய்
தொட்டு தடவி
ஆண்டவன்
துணையென்றான்
பூசாரியான்..!
அலறி ஓடுகிறேன்..
எங்க போவேன்...
அந்தக் கிழவி
""""""""""""""""""""""
மாத இறுதி...
கையில்,
இருப்போ நூறு ரூபாய்...
அரசு மருத்துவமனை வாசல்...
சுருக்கங்கள் நிறைந்த ஒரு,
கை... என் கையை பிடிக்க...
பக்கென்றானது...
ஏய்... கிழவி...
என்ன வேணும்...?
காசுலாம் இல்ல போ...!
என்று சொல்லிவிடலாம் போல்,
இருந்தது...
உண்மையும் அதுதான்...
என்வாயில் வார்த்தை வருவதற்குள்...
அவள் முந்திக்கொண்டாள்...
தம்பி...
என்னால நடக்க முடியல...
என்ன கைதாங்கலா...
இந்த ஆஸ்பத்திரிக்குள்ள,
கூட்டி போறியா...
சரியென்று அவள் கையை...
நான் பிடிக்க...
நத்தை போல்,
எங்கள் பயணம் தொடர்ந்தது...
ஏங்கிழவி...
இங்க,
கூட யாரும் இல்லையா...?
இ
தமிழா_தமிழா....
இவரை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
நமக்கு தெரிந்ததெல்லாம் பணம் கொழிக்க விளையாடும் கிரிக்கெட் மட்டும்தானே...!!?
திருச்சி செங்காட்டுபட்டி குக்கிராமம்,
500 ரூபாய் வாடகையில் சிறிய குடிசை வீடு.
ஒருவேளை சாப்பாட்டுக்கே பஞ்சம்.
தந்தை இல்லை. தாய் கல் உடைக்கும் தினக்கூலி, வீட்டில் மொத்தம் ஐந்து பிள்ளைகள்
இச்சூழலிலும்கூட ராஜேஷ் என்ற இந்த இளைஞர் சத்தமே இல்லாமல் சாதித்து நம் நாட்டிற்கு பெருமை தேடி தந்திருக்கிறார்.
ஆம் கத்தாரில் நடைபெற்ற 'டெக்காத்லான்' தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றிருக்கிறார்...
தம்பி...
கடன் வாங்கி குடுத்திருக்குப்பா
மறக்காம போன உடனே எடுத்து
பீஸ் கட்டிரு...
--- இது அப்பா.
கண்ணு...
மறக்காம போய் சேர்ந்ததும்
ஒரு போன் போட்ரு
எகுத்த வீட்டு வாத்தியார் வீட்டுக்கு...
--- இது அம்மா.
ஏ ராசா..
வேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா
வாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா ..
--- இது பாட்டி.
எப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா
நம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும்
--- இது தாத்தா.
என்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா
எப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா
--- இது அண்ணன்.
மறக்காம புது பேனா வாங்கிக்க
என் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்..
--- இது
ஒரு தலை காதல் கொண்டேன் மானம் இழந்தேன்
இரு தலை காதல் கொண்டேன்
உறவுகள் இழந்தேன்
தோழியிடம் நல்ல நட்பு கொண்டேன் மனைவியையே இழந்தேன்
நம் நாடு உலகில் உயர்ந்தது என உறுதியாய் நம்புவோம்;
நாட்டைச் சுரண்டும் தீய சக்திகளை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவோம்;
நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போரை போற்றுவோம்.
உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ....
சுதந்திர தின வாழ்த்து அட்டைகள் அனுப்ப இங்கே சொடுக்கவும்.
மேலும் சுதந்திர வாழ்த்து அட்டைகள் அனுப்பி மகிழ இங்கே சொடுக்கவும்.
இன்று... ஆகத்து 13
பொதுவுடைமைப் புரட்சியாளர், கியூபாவின் முன்னாள் அதிபர், பிடல் காஸ்ட்ரோ ( #FidelCastro ) பிறந்த தினம்..
தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்..
--பிடல் காஸ்ட்ரோ