* பெண் என்பவள் வெறும் சதையா..??? * 🔸பெண்...
*பெண் என்பவள் வெறும் சதையா..???*
🔸பெண் புடவை கட்டினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
🔸அவள் சுடிதார் உடுத்தினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
🔸அவள் பர்தா போட்டாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
_பெண்ணின் உடையிலும் பிரச்சனை இல்லை.....!_
🔹பெண் ஏழு வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் பதினேழு வயதிலும் கற்ப்பழிக்கபடுகிறாள்,
🔹அவள் எழுபது வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்.
_பெண்ணின் வயதிலும் பிரச்சனை இல்லை.....!_
🔸பெண் இந்துவாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் முஸ்லீமாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் கிறிஸ்தவராக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
_பெண்ணின் மதத்திலும் பிரச்சனை இல்லை.....!_
🔹பெண் தாயாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் மனைவியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் சகோதரியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
_பெண்ணின் உறவிலும் பிரச்சனை இல்லை.....!_
🔸பெண் தமிழச்சியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் வடமொழி பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் ஆங்கிலம் பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
_பெண்ணின் மொழியிலும் பிரச்சனை இல்லை.....!_
🔹பெண் கருப்பாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் வெள்ளை மயிலாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் கொள்ளை அழகாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
_பெண்ணின் நிறத்திலும் பிரச்சனை இல்லை.....!_
*அப்போ எங்கு தான் பிரச்சனை..???*
சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் இல்லையேல் நாம் திருந்த வேண்டும்.....!
சமூகத்தின் மீதும் பெண்கள் மீதும் ஏன் பழிப்போட வேண்டும்..???
ஆண்களுக்கு பெண்களை விட வலிமையை தந்து இருப்பது அவளை காக்கவே தவிர பறிக்க அல்ல.....!
பெண்களை தாயாக சகோதரியாக பார்க்காவிட்டாலும் அவர்களை காமமாக பார்க்காதீர்கள்.....!
இந்த எழுத்துக்கள் கண்ணீர் சிந்தும் என் கண்மணிகளான சகோதரிகளுக்கு சமர்பணம்..!!!_
*சிந்தியுங்கள்... செயல்படுங்கள்...*