அந்தக் கிழவி

அந்தக் கிழவி
""""""""""""""""""""""
மாத இறுதி...
கையில்,
இருப்போ நூறு ரூபாய்...

அரசு மருத்துவமனை வாசல்...
சுருக்கங்கள் நிறைந்த ஒரு,
கை... என் கையை பிடிக்க...
பக்கென்றானது...

ஏய்... கிழவி...
என்ன வேணும்...?
காசுலாம் இல்ல போ...!
என்று சொல்லிவிடலாம் போல்,
இருந்தது...
உண்மையும் அதுதான்...

என்வாயில் வார்த்தை வருவதற்குள்...
அவள் முந்திக்கொண்டாள்...

தம்பி...
என்னால நடக்க முடியல...
என்ன கைதாங்கலா...
இந்த ஆஸ்பத்திரிக்குள்ள,
கூட்டி போறியா...
சரியென்று அவள் கையை...
நான் பிடிக்க...
நத்தை போல்,
எங்கள் பயணம் தொடர்ந்தது...

ஏங்கிழவி...
இங்க,
கூட யாரும் இல்லையா...?

இல்லதம்பி...

உனக்கு எத்தன பசங்க...?
மூனுபேரு...

என்ன பண்ணுறாங்க...?
இரண்டு பசங்க இறந்துட்டாங்க...!
சற்று மெல்லிய குரலில்...

கடைசிபையன் என்ன பண்ணுறான்...?
அவனா....
நான் செத்து பத்து வருசமாச்சுன்னு,
சொல்லிட்டு இருக்கான்,
மாமியார் வீட்டுல...!

தம்பி ஒரு சின்ன,
உதவி...
கோச்சிக்காம பண்ணுவியா...
தழுதழுத்த குரலில்...!

சொல்லு என்ன செய்ய...?
அந்த முக்குல...
ஒரு பொம்பள இட்லி விக்கும்...
ஒரு மூனு இட்லி மட்டும்...?
தயங்கிய குரலில்...

நினைச்சேன்...
கிழவி நம்ம நூறு ரூபாய்க்கும்,
ஆப்பு வைக்கும்னு...!

மொத ரெண்டு பசங்க செத்து,
போய்டாங்கலாம்...!
கடைசி பைய...
அம்மா செத்து போய்டுச்சின்னு சொல்லி..
மாமியார் வீட்டுல இருக்கானாம்...!!

நல்ல புளுவுதுடா..
இந்த கிழவி....

பசிக்குதுனு கேட்டா...
வாங்கி தரப்போறேன்...
அதுக்கு இப்படியா....

என்று...
இட்லி கடையை நோக்கி...
எனது கால் நடக்கத்துவங்குவதற்கு,
முன்...
மறுபடியும் கிழவியின் குரல்...
தம்பி.... !!!!

என்ன...?
காசு வாங்காம போறியேயா...
என்றவாறே,
தன் கையை நீட்ட...

கையில் கசங்கிய இரண்டு,
பத்து ரூபாய்த் தாள்கள்...!!

இந்தாயா... காசு...
மாச கடைசி...
உன்கிட்ட காசு,
இருக்குமோ...?
இருக்காதோ...?
இதுல வாங்கிட்டு வாயா...!
ஆமா நீ சாப்டியா தம்பி...?

என் வாயில் வார்த்தைகள் இல்லை...

என்னப்பா அமைதியா இருக்க...
சாப்டியாய்யா...?

இல்ல "பாட்டி"

வாங்கிட்டி வாயா...
சேந்து சாப்புடுவோம்....

அவளும் மூன்று பிள்ளைகளுக்கு,
"தாய்" தானே...!

உலகத்தில் உள்ள...
அனைத்து தாயின் குணமும்,
ஒன்று தான்... !
"தன் பிள்ளைகளை பாதுகாப்பது."

பிள்ளைகள் தான் தவறவிடுகிறார்கள்...
தன் தாயை....!!!

ஆமா, இப்ப எங்க பாட்டி இருக்கீங்க..?

அந்த அல்லா கோவில் வாசல்ல,
உக்காந்திருக்கம்பா...
"பிச்சை எடுத்துக்கிட்டு"


இவண்
✒க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (30-Sep-15, 12:44 am)
சேர்த்தது : க முரளி
Tanglish : andhak kizhavi
பார்வை : 287

மேலே