இமையத்தில் இருக்கும் இனிய மொழி தமிழ் கவிஞர் இரா இரவி
இமையத்தில் இருக்கும் இனிய மொழி தமிழ்! கவிஞர் இரா. இரவி
இமையத்தில் இருக்கும் இனிய மொழி தமிழ்
எந்த மொழியும் எம் தமிழுக்கு ஈடு இணை இல்லை!
எல்லா மொழிகளுக்கும் சொற்கள் தந்தது தமிழ்
எல்லா மொழிகளின் தாய்மொழி நம் தமிழ்!
அமெரிக்கா ஆய்வாளர் ஆய்வின் முடிவு
அகிலத்தின் முதல்மொழி அன்னைத் தமிழே!
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் உரைத்தார் அன்றே
மொழி ஆய்வாளர்கள் வழிமொழிந்தனர் அவர் கூற்றை!
இலக்கண இலக்கியங்களின் இமையம் தமிழ்மொழி
இவ்வளவு இலக்கியங்கள் வேறுமொழிகளில் இல்லை!
தமிழ் என்று தொடங்கும் பெயர்கள் ஆயிரம் உண்டு
தமிழ் தவிர வேறு மொழிகளுக்கு இவை இல்லை!
மொழியின் பெயரில் நாடு உள்ள நாடு தமிழ்நாடு
மொழியாக பன்னாடுகளில் ஒலிக்கும் நம் தமிழ்!
தமிழகம் இலங்கை சிங்கப்பூர் மலேசியா ஆட்சிமொழி
தமிழ்மொழி தவிர வேறு இந்திய மொழி பன்னாட்டில் இல்லை!
உலகம் முழுவதும் தமிழன் இல்லாத நாடே இல்லை
உலகம் முழுவதும் தமிழ் ஒலிக்காத நாடே இல்லை!
திருக்குறள் ஒன்றுபோதும் தமிழ்மொழிக்கு மகுடம்
திருக்குறளை மொழி பெயர்க்காத மொழியே இல்லை!
ஒன்றிய அரசசே தமிழ்மொழிக்கு கோடிகள் கொடு
ஒழிந்து போன சமசுகிருதத்திற்கு தந்தவை போதும்!
தமிழ்மொழியை சென்ற இடமெல்லாம் புகழ்ந்தது போதும்
தமிழ் மொழியை ஒன்றிய ஆட்சிமொழியாக அறிவியுங்கள்!

