nisha meharin - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : nisha meharin |
இடம் | : trichy |
பிறந்த தேதி | : 17-Dec-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Apr-2012 |
பார்த்தவர்கள் | : 1650 |
புள்ளி | : 434 |
களத்திற்கு வந்த பின் கத்தியை தீட்டுபவள் நான்................
நானென்பது நான் தானா-நான்
நானென்பது சரிதானா?
நீ என்னுள் உயிரான பின்னே-நான்
நானென்பது முறைதான?..
பூவே இந்த
தென்றல் சாட்சி கேள்!-என்
நெஞ்சில் என்றும்
உந்தன் ஆட்சிதான்-
என் கண்ணில் மின்னும்
உந்தன் காட்சி பார்!-
என் ஜீவன் எல்லாம்
உந்தன் கட்சி தான்..
எனைத் தேடியே அலைந்தேனடி
உனைக் கண்டதும் தொலைந்தேனடி
நீ தானே திறமாகக் களவாடினாய்-என்
உயிரோடு உனைச்சேர்த்து விளையாடினாய்
உளி கொண்டுதான் யென்னைச் செதுக்கிடு-உன்
உயிர் கொண்டுதான் எனைச் செய்திடு
நாளெல்லாம் நீ நினைவில் வந்தால்
கார் காலம் கண்ணே!
தீராத சோக மெல்லாம்-அட
என்னுள்ளே தீரும் பெண்ணே!
பூவோடு பேசும்
ஏழையென பலரிருக்க
எட்டுமாடி வீடுகட்டி
எச்சிக்கையில் காக்காய் விரட்டி
எவர் துன்பத்தையும் உணராத
எல்லா கஞ்சர்களை அழையுங்கள்
திருவோடு கையோடு பலரிருக்க
திருந்தாத முண்டங்களாய்
திண்ணையில் அமர்ந்து கொண்டு
திருநாட்டின் புகழ் பாடும்
தீய்ந்த புண்ணாக்குகளை அழையுங்கள்
குலசாமி தெய்வமென்று
குடிபோதை கேட்குதென்று
குடிக்க காரணம் சொல்பவனை
குடுமியை பிடித்து அழையுங்கள்
பட்டினியில் பலர் வாட
பாடையில் இட்ட பிணமாய்
பலநேரம் கண் சிமிட்டாமல்
படம் பார்த்து பொழுது கழிப்போரை
பாரதி கண்ட பெண்களாவென
பளிச்சென்று அடித்து அழையுங்கள்
முந்தானைக்குள் ஒளிந்து
முடங்கிப் போன
மூடர்களை க
எப்படி எல்லாம்
என்னை வளர்த்தாய் அம்மா...!!
முதல் கவிதை
நான் எழுதி
முதன் முதலாய்
உனக்கு காண்பிக்க
முத்தாக இருக்கு என்றாய்...
மூக்குசளி ஒழுகும்
உன் மகள் எனக்கு
முந்தாணியில் நீ
துடைத்துவிட்ட....
உன் முந்தாணி வாசம்
என் கை குட்டையில்
இல்லை அம்மா...
மிட்டாய் வாங்க
ரூபாய் கேட்டால்
என்னை அலைகழித்து
மசாலா பெட்டி திறந்து
நீ கொடுத்த
ஒற்றை நாணயத்தின்
வாசமே தனி...அம்மா
மறுநாள் நாணயம்
இடம் மாறி
"டீ" பொடி பெட்டியில்
இடம் பிடித்தது.....
அது வேறு செய்தி...
என் பள்ளியில்
மாறு வேடப்போட்டி
நடக்க
பாரதியின் வேடம் போட
அப்பாவின் வேட்டி கட்டி..
அண
மன்னிப்பே தண்டனை
மன்னியுங்கள்.
மன்னிக்கப்படுவீர்கள்.
தவறுகளின் அரிவாள் வீச்சுக்கு
தண்டனையின் கோடரி வீச்சு
தற்காலிகத் தீர்வுகளையே
தந்து செல்லும்.
மாற்றங்களின்
மெழுகுவர்த்திகளை,
மன்னிப்புகள் மட்டுமே கொளுத்தும்.
தண்டனையின் காயம்
இன்னொரு பிழைக்கு
பிள்ளையார் சுழியாவதுண்டு.
மன்னிப்பின் மடியிலோ
மரணம் கூட மகத்துவமானது.
மன்னிப்பு,
குற்ற உணர்வுகளை
வெற்றி கொள்ளும்.
மற்ற உணர்வுகளை கொஞ்சம்
மாற்றியே வைக்கும்.
தண்டனை
அணைகளைக் கட்டும் முயற்சி.
மன்னிப்போ
வாய்க்கால் வெட்டும் முயற்சி.
தண்டனை,
உடல் சார்ந்த உபாதை,
மன்னிப்போ
மனம் சார்ந்த பாதை.
ஒரு குறும்படத்திற்காக நான் எழுதி ஒலிப்பதிவு செய்யப்பட்ட கவிதைகள் .
1)
அலைகள் தழுவும்
இன்பக் கடற்கரையில்
மயிலிறகு வருடும்
புதுசுகமாய்..
மந்திர விழியில்
சுந்தர அழகில்
மின்னல் ஒளியாய்
படபடக்கிறாள்
என் நினைவு வானில்.....!
2)
கண்ணிரண்டும் நாட்டிய நடனமாட
கையிரண்டும் அழகிய கவிப்பாட
அவள் சிரித்து பேசும் அழகு
என்னில் , முளைத்து பறக்கிறது
பட்டாம்பூச்சி சிறகு.
3)
அந்த பாரதிக்குள் பிணைந்த
கவிதைகளைப்போல
உந்தன் மித்ரனுக்குள் புதைந்த
பாரதியும் நானே..!
எனக்குள் அன்பாய் இணைந்த
காதல் கவியும் நீயே..!
------------------------------------------------------------------
-இ
இந்த உலகம் உனக்கு
சிறையல்ல நீதான்
கைதியாய் வாழ்கிறாய்
*
நீ மண்ணுக்காக போராட
தயங்குகிறாய் ஆனால்
ஒவ்வொரு விதையும்
மண்ணோடு போராடியே
மரமாகிறது
*
வியர்வை சிந்தாத உன்னாலும்
மை சிந்தாத பேனாவாலும்
எதையும் சாதித்திட முடியாது
*
தடை தாண்டி
ஓடிக் கொண்டிருப்பவனுக்கு
தடைகள் கண்ணுக்குத் தெரியாது
நீ நினைப்பது போல வாழ்க்கை
ஒன்றும் மாரத்தான் ஓட்டமல்ல
அது தடைதாண்டும் ஓட்டமே
*
பெருமை
என்பது உன்னைவிட
திறமைசாலிக்கு நீ
கைதட்டுவதில் அல்ல
அவனையும் உனக்காக
கைதட்ட வைப்பதுதான்
*
இந்த உலகம் பூந்தோட்டமல்ல
நீ வளர தண்ணிர் ஊற்ற
இந்த உலகம் பெருங்காடு
நீயாத்தான் வளர
விடியல் வரும் நேரமதில்
துயரமும் துன்பமும் அழிவும் வரும்
விடியல் வரும் நேரமதில்
துயரமும் துன்பமும் அழிவும் வரும்
கனவுகள் மெய்ப்பட
மனதை சிதறவிடாதே!
இலட்சிய பாதையில் செல்லும் வேங்கைகள்
நிச்சியம் விடியலை தருவார்கள்
கனவுகள் மெய்ப்பட
மனதை சிதறவிடாதே!
விடியல் வர
காலங்கள் பல ஆகலாம்
ஆனால் விடியல் நிச்சயம் வரும்
கனவுகள் மெய்ப்பட
மனதை சிதறவிடாதே!
தலைவனின் கையை பலபடுத்தினால்
விடியல் மிகவிரைவில் உன்னை முத்தமிடும்
கனவுகள் மெய்ப்பட
மனதைசிதறவிடாதே!
தமிழனின் பலத்தை அறியாமல்
மற்றவர் கூறும் கூற்றை எண்ணி கலங்காதே
விடியல் வரும் நேரமதில்
கனவுகள் மெய்ப்பட
மனதை
விடியல் வரும் நேரமதில்
துயரமும் துன்பமும் அழிவும் வரும்
விடியல் வரும் நேரமதில்
துயரமும் துன்பமும் அழிவும் வரும்
மனதை சிதறவிடாதே!
இலட்சிய பாதையில் செல்லும் வேங்கைகள்
நிச்சியம் விடியலை தருவார்கள்
மனதை சிதறவிடாதே!
விடியல் வர
காலங்கள் பல ஆகலாம்
ஆனால் விடியல் நிச்சயம் வரும்
மனதை சிதறவிடாதே!
தலைவனின் கையை பலபடுத்தினால்
விடியல் மிகவிரைவில் உன்னை முத்தமிடும்
மனதைசிதறவிடாதே!
தமிழனின் பலத்தை அறியாமல்
மற்றவர் கூறும் கூற்றை எண்ணி கலங்காதே
விடியல் வரும் நேரமதில்
மனதை சிதறவிடாதே!
எவரும் எம் நிலத்தை பறிக்க இயலாது
ஆளவும் முடியுமா
பதிங்கியிருக்கும் தமிழர் நாளை
இன்ப அதிர்ச்சி த