confidentkk - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : confidentkk |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 09-Nov-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 265 |
புள்ளி | : 145 |
அழகான வலிகளையும்,ஆழமான வரிகளையும் நேசிக்கும் இதயம் நான்......
கவிதை ரசிக்க வந்தேன் அன்று.- ஒரு
கவிதையே ரசிக்கிறது எனை இன்று
--------------------------
இணையதளத்தில் இணைந்தேன்
ஓர் இதயத்தில் விழந்தேன்.
--------------------
-இரா.சந்தோஷ் குமார்.
அதிகம் யோசிக்கவேண்டாம்
இது கவிதையென்று
நான் சொல்லவில்லை.
ஆனாலும்
இது க’விதை..!
”கத்தி ”பேசினால்
சத்தம் வெடிக்கும்
யுத்தம் கிழிக்கும்
பதட்டம் வரும் -பின்பு
கெளரவம் உடையும்.
எந்த கத்தி ?
யோசிக்க வேண்டியது
உங்கள் புத்தி..!!!
-இரா.சந்தோஷ் குமார்
இப்போதெல்லாம்
எப்போதோ வீசும்
தென்றல் வினோதங்கள்
எந்தன் மேனியில்
உரசி சிலாகித்து
இனிப்பு ருசியறிந்து
பசியாறுகிறது.
பாவம்.!
இதற்கு முன்
தேனீக்களின் காட்டில்
தென்றல்
சென்றதில்லையாம்..!
ஓ தென்றலே...!
எப்போதும் நான்
கெளரவ கதவடைத்து
ஆசை ஜன்னலை
திறந்தே வைத்திருக்கிறேன்.
என் மீது
யாருமறியாமல்
மெளனாய் வீசு.
சத்தமாய் காதலி.
ஆனால்
மொத்தமாய் இல்லாமல்
கொஞ்சமாய் கொஞ்சமாய்
ரசனையோடு
என்னை கொன்றுவிடு.
நான்
இன்னும் இன்னும்
வாழ வேண்டும்
வாழ்ந்தே தீர வேண்டும்.
என் கன்னித்தென்றலே...!
எப்போதாவது வந்துவிடாமல்
எப்போதும் வந்துவிடு
யாரும் சொல்லத்தயங்கும்
ஆசைகளை கவிதையாய
என் தேவதையின் கவிதை.
இசையொன்று
இசைத்திடும்
இசைகேட்டு - உன்னிதயம்
இசைந்துவிடக்கூடுமோ - யானதில்
இதம் காணலாகுமோ ?
வண்ணத்துப்பூசியென
வாலிபம்தான்
வசந்ததத்தை நாடுதே
வசப்படுமோ?
அசைவின்றி கிடந்தாலும்
சிலையழகு
அடித்துவிட்டு சென்றாலும்
அலையழகு
கடுந்தேறு
கொடுக்கெனவே - எனை
வெடுக்கேன்றுக் கொட்டினாலும்
உன் விழியழகு
உச்சிக்கிழனாக - எனை
உஷ்ணத்தில் நனைத்தாலும்
உள்ளாடும் அன்புதனில்
உயிர்குளிரச் செய்யும் - உன்
உறவழகு
கேட்கிறதா?
கண்ணனின் மறுபிறப்பே !
காமனுக்கு கலைகள்சொன்ன
கட்டழகே !
கேட்கிறதா?
உன்னிதயத் தின் வாசமெனை
இழுக்கிறதே !- என்
இளமையத னோசை
தனிமையின் வழியில்
நகர்கிறது
என் வாழ்நாட்கள்...
விழியோரம்
வலிகளின் ஈரம்
துளிகளாய் வழிய...
விடியும் பொழுதுகளில்
ஏக்கங்கள் நிறைய ..
வாழ்வோ கனலாக
வாழும் நாட்களோ
கானலாக..
சுற்றித்திரிகிரேன்
சுற்றமற்று .....
தோள் சாய்ந்திட யாருமில்லை
தோளில் சாய்ந்திட நீயும் இல்லை....
நான் போக பாதை இல்லை..
உடன் பயணிக்க எவரும் இல்லை...
எனக்கே
நான் யாரோ
எனக்காய் இனி யாரோ ?
என தோன்ற
என் தோற்றமோ
பொய்யாய் போக
நான் போகிறேன் !
மெய் மறந்து
என் பாதைகளில்,
விழிகளின் ஈரம் காயாமல் ,
நெஞ்சின் காயம் ஆறாமல்,
கண்ணீர்த் துளி வரையும்
கவிதைகளில்
வரி(லி)களாக .......
தனிமையின் வழியில்
நகர்கிறது
என் வாழ்நாட்கள்...
விழியோரம்
வலிகளின் ஈரம்
துளிகளாய் வழிய...
விடியும் பொழுதுகளில்
ஏக்கங்கள் நிறைய ..
வாழ்வோ கனலாக
வாழும் நாட்களோ
கானலாக..
சுற்றித்திரிகிரேன்
சுற்றமற்று .....
தோள் சாய்ந்திட யாருமில்லை
தோளில் சாய்ந்திட நீயும் இல்லை....
நான் போக பாதை இல்லை..
உடன் பயணிக்க எவரும் இல்லை...
எனக்கே
நான் யாரோ
எனக்காய் இனி யாரோ ?
என தோன்ற
என் தோற்றமோ
பொய்யாய் போக
நான் போகிறேன் !
மெய் மறந்து
என் பாதைகளில்,
விழிகளின் ஈரம் காயாமல் ,
நெஞ்சின் காயம் ஆறாமல்,
கண்ணீர்த் துளி வரையும்
கவிதைகளில்
வரி(லி)களாக .......
இயலாமை
இல்லாமை ஆகும் நாள்
எந்தநாளோ ?
அந்தநாளே
மானுடப்பிறப்பின்
உண்மையான வாழ்நாள்.....
எனக்காக எதுவுமே இல்லை
என்று நானிருந்த வேளை
எனக்கான எல்லாவுமாய் வந்த
முதல் அன்பு
என் காதல்....
அதுவரை ரசித்ததில்லை
எதையும் நான்
அக்கணமே ரசிக்க ஆரம்பித்தேன்
என்னையே நான்....
என் உயிரின் உருவம்
எதிரே கண்டேன் !
மெய் சிலிர்த்து
நான் நின்றேன்....
விலக நினைத்த
நிமிடங்களில்,
விரும்பி நடந்தேன் ..
என் காதலின்
கரம் பிடித்து...
மறுமுறை பிறந்தேன் !
புதிதாக..
கருவறை சுகத்தை
மீண்டும் தந்த
என் காதலால்...
கல்லறை நான் சேரும் வரை
இதயக் கருவில்
பூத்திருக்கும் என்
காதல் பூக்கள் உதிராமல்
ஆதலால்....
அன்பின் தேடலுக்கு
எல்லை இல்லை..
என் தேடலுக்கு,
இமை படித்
பிரிவின் தவம் கலைத்து
உன்னை பார்க்கும் அந்த நிமிடம்
வார்த்தை மௌனமாகும்
கண்ணீர் வார்த்தையாகும்..
என் நலம் நீ கேட்க
உன் நலம் நான் சொல்ல
உன்னை பார்க்கும் கனவு
நனவான சந்தோஷத்தில்
இதயம் துள்ளிகுதிக்க
இதழ்களை புன்னகை நனைக்க
இமைகள் உன்னை பார்த்தபடி
இமைக்காமல் என் நொடிகள் நகர
துடிக்காமல் என் சுவாசம் நிகழ
வசந்தம் வந்து அருகில் அமர
வாழ்க்கை வானை எட்டிபிடிக்க
கைகள் உன்னை பிடித்து
கால்கள் நலமாய்
நடைபோடும்
அன்பின் பாதையில்
அந்நாளில் உன்னோடு சேர்ந்து ....
என் நாட்கள்
காகிதப்பூக்கள் ..
உன் நினைவெனும்
(சு)வாசம் தந்தாய்
ஆகையால் என்
நாட்கள் இன்று
உயிர் கொண்ட
வண்ணப்பூக்கள்...
உனக்காக வாழும்
நிமிடங்கள்
உணர்வுள்ளது..
உன்னோடு வாழும்
நிமிடங்களில் என்
உயிர் உள்ளது...
மலர்வதாய் நினைத்து
உதிரும் பூக்கள்
நாம் வாழும் நாட்கள்....