Arulrathan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Arulrathan |
இடம் | : மட்டக்களப்பு |
பிறந்த தேதி | : 29-May-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 375 |
புள்ளி | : 44 |
அலைகிறேன்
கவிதையின் வீட்டுக்கு
முகவரி மறந்து
கற்ககளும்
முட்களும்
கால் தட்டிய படியே
உன்னைமட்டும்
எண்ணியபடியும்
எண்ணாமலும்
என் பயணணம்
தொடர்கிறது
நீ
அழகான தமிழ்
(2014) வருடத்தின் கடைசி ஆசை
இரவுகள் கொலை செய்யும் பகல்களும்
பகல்களை துரத்தி நிற்கும் இரவுகளுமாக
நாட்கள் காயத்தோடே கடந்துவிட்டன
வாரங்கள் கை வெட்டப்பட்டு
வழியேங்கும் இரத்தங்கள் சிந்த
மாதங்களோ மரணித்துபோயின
இன்று வருடத்தின் இறுதி மூச்சு
மரணத்துக்கு சில மணிகள் மட்டுமே
மண்டியிட்டு கேட்டு நிற்கிறது
உயிர் கொல்லும் வன்முறை வேண்டாம்
உயிர் செல்லும் வார்த்தைகளும் வேண்டாம்
என்னோடு முடியட்டும் இந்த வன்முறைகள்
(வன்முறைகள் இல்லா தேசம் படைப்போம்)
யாருமில்லை
அருகேயும்
அகத்தேயும்
அன்புக்குமட்டுமேனும்
அருகதை இல்லை
அழும் கதைதான்
என்பக்கத்தின்
எல்லா பக்கமும்
அணைத்துக்கொண்டே
அழைத்துக்கொண்டு செல்கிறது
கண்ணீரின் கைகள்
கனலின் வழியே
சிரித்துக் கொண்டே
மறைத்துக்கொண்டேன்
என்னில் சிறைபட்டுபோன
சிறு ரணங்களை கூட
என்றும் விழித்துக்கொண்டே
வலித்துக்கொண்டிருபேன்
விடியலின்
விழுதுகளைநோக்கி...
பெய்யும் மழை
ஒற்றைக் குடை
நட்பு கேட்கும் விரல்கள் மட்டும்
நன்றி
காதலுக்கு
நட்பை
பிரியவைத்ததற்கு
நன்றி
நட்புக்கு
காதலை
புரியவைத்ததற்கு
பிரிதலும் பின்
புரிதலும்
அன்பினால் மட்டுமே