2014 வருடத்தின் கடைசி ஆசை
(2014) வருடத்தின் கடைசி ஆசை
இரவுகள் கொலை செய்யும் பகல்களும்
பகல்களை துரத்தி நிற்கும் இரவுகளுமாக
நாட்கள் காயத்தோடே கடந்துவிட்டன
வாரங்கள் கை வெட்டப்பட்டு
வழியேங்கும் இரத்தங்கள் சிந்த
மாதங்களோ மரணித்துபோயின
இன்று வருடத்தின் இறுதி மூச்சு
மரணத்துக்கு சில மணிகள் மட்டுமே
மண்டியிட்டு கேட்டு நிற்கிறது
உயிர் கொல்லும் வன்முறை வேண்டாம்
உயிர் செல்லும் வார்த்தைகளும் வேண்டாம்
என்னோடு முடியட்டும் இந்த வன்முறைகள்
(வன்முறைகள் இல்லா தேசம் படைப்போம்)