பயணம்
![](https://eluthu.com/images/loading.gif)
பேருந்தில் பயணம்..
எங்கெங்கெல்லாம் நிற்க முடியுமோ
நின்று..நின்று..நின்று..
போகும் பேருந்தில் ..
போய்க் கொண்டிருந்தேன்..
வழியை மறித்த எருமை மாட்டைக் கூட
அதுவாக நகரும் வரை பொறுமையாய் காத்து நின்று..
நகர்ந்த பேருந்தில் பயணம்..
வாழ்க்கையைப் போல..!
அதன் போக்கில் ...
பயணம்!
கண்டதும் இடித்து..
விபத்தில் மாட்டாமல் போனால் சரி !