உன் பிம்பமே அதுவுமென்று உணர் - யாழ்மொழி

ஒள்ளொன்று உள்ளே
ஒளிறுகிற தென்றே
ஒவ்விட மெய்ஞானம றிந்திடவே
ஒள்ளியராவரே எவரும்
ஒருப்பாக இங்கே.....

எண்ணங்கள் யாவையும்
எள்ளெனக் கொண்டே
எந்நாளும் ஊற்றிட
நல்லொளி மிளிர
நன்மை யது பெருகுமே
நானிலமெங்கும்.....

நல்லோர் தீயோர் நடுநிலையானோர்
நாயினம் நரியினம் நரகரினம துவும்
நாமஞ்சாற்றிய நாந்தக நாவும்
நட்டவர் நாமெனவும்
நம் பிம்பமே அதுவுமென் றுணர
நீங்கா நிம்மதி பயக்குமே நெஞ்சில்.....

குற்றங்கள் சாட்டிட
குறைகளையே பார்த்திட
கற்றவை யாகுமே குப்பைகளென்றே
ஒற்றுமை வளர்ந்திட
உயர்நிலை அடைந்திட
மன்னிக்கப் பழகுதல்
மனிதமென்றாகுமே
பூமண்டலம் மலருமே.....

எழுதியவர் : யாழ்மொழி (31-Dec-14, 11:15 am)
பார்வை : 86

மேலே