வாய்ப்புக் கொடுங்கள்
வாய்ப்புக் கொடுங்கள்!!!
வாய்ப்புக் கொடுங்கள்!!!
வாழ்க்கையைக் கற்று
கொடுக்க வாய்ப்புக்
கொடுங்கள்!!!
சூரியனுக்கு
வாய்ப்புக் கொடுங்கள்
அதிகாலை எழுவதை
கற்றுக் கொடுக்கும்,
பூக்களுக்கு
வாய்ப்புக் கொடுங்கள்
முக மலர்ச்சியை
கற்றுக் கொடுக்கும்,
எறும்புகளுக்கு
வாய்ப்புக் கொடுங்கள்
சுருச்சுருப்பை
கற்றுக் கொடுக்கும்,
தேனீக்களுக்கு
வாய்ப்புக் கொடுங்கள்
சேமிப்பைக்
கற்றுக் கொடுக்கும்,
கடிகார முற்களுக்கு
வாய்ப்புக் கொடுங்கள்
காலம் தவறாமையை
கற்றுக் கொடுக்கும்,
காக்கைக்கு
வாய்ப்புக் கொடுங்கள்
நல் ஒற்றுமையை
கற்றுக் கொடுக்கும்,
குயிலுக்கு
வாய்ப்புக் கொடுங்கள்
சங்கீதத்தை
கற்றுக் கொடுக்கும்,
நாய்களுக்கு
வாய்ப்புக் கொடுங்கள்
நன்றியுணர்வை
கற்றுக் கொடுக்கும்,
இப்படி நம்மைச் சுற்றி நிறைய
வாய்ப்புகள் இருந்தும்
வாழ்க்கையை வழி
நடத்த வாய்ப்புகள்
இல்லை என்றால்
நியாயமா?
மனிதா?
மனிதா?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
