புத்தாண்டின் புதிய பாதை புதிய அத்தியாயம்

இரவில் விரிவும் கனவுகள்
இனிமை
பகலில் தொடரும் நிஜங்கள்
வித்தியாசமானவை
கனவுகள் கவிதைகள் இனிமையில்
விரிவதில்லை
உண்மை வாழ்க்கை !
யதார்த்தத்தின் சத்தியத்திலே அமையும்
மனித வாழ்க்கை
யதார்த்தத்தின் நடைமுறை சாத்தியத்தில்
வாழ்க்கையின் புதிய பாதையை சமை !
அது உன் லட்சிய கனவுகளின்
புதிய அத்தியாயங்களாக நிச்சயம் இருக்கும் !
~~~கல்பனா பாரதி~~~