கவிஞர் சௌந்தரராஜன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவிஞர் சௌந்தரராஜன் |
இடம் | : நாமக்கல் |
பிறந்த தேதி | : 09-Jun-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 113 |
புள்ளி | : 21 |
கவிதை, சிறுகதை, பேச்சு ஆர்வம் rnrn"அடையாளம் தேடுகின்றேன்" என்ற புத்தகத்தை படைத்துள்ளேன்
பொங்கல் என்று சொல்லிப்பார்த்தால்
உள்ளங்கள் பொங்கும்,
உலையும் பொங்கும்,
காளைகள் துள்ளும்,
நெல்மணிகள் அள்ளும்,
நன்றிகள் சொல்லும் திருநாள்.....!
தைத் திங்களில்
ஞாயிறுக்கும்,
மாரிக்கும்,
உள்ளம் பூரிக்க
நன்றி சொல்லும் திருநாள்....!
சேற்றில் வைக்கும் கால்களுக்கும்,
நாற்றில் விடும் பயிர்களுக்கும்,
நன்றி சொல்லும் திருநாள்....!
மண்பானைகளை
இன்றுவரை உயிர்ப்பித்து,
அலங்காநல்லூருக்கும்,
செங்கரும்புக்கும்,
பெருமை சேர்க்கும் திருநாள்...!
வானும் மண்ணும் உள்ளவரை
என்று சொல்வதை விட,
கதிரவனும் காற்றும் உள
நிகழ்வதே நிஜமானது.,
நிஜமும் நிரந்தரமானது அல்ல.,
நிரந்தரமானதாய் நிகழ்வதும் இல்லை...!
நேற்று இரவு முழுவதும் சொன்ன வார்த்தையை,
இன்று அவளிடம் சொல்ல
என்னைப் போலவே வேர்த்து சிவ(ரி)க்கிறது
கைகளோடு சிகப்பு ரோஜா...!
நல்லவை நினை மனமே
இங்கு நடப்பவை எல்லாம் நல்லவையே....!
இன்றைய தோல்வி நாளைக்கு தோற்கும்
திண்ணிய நெஞ்சமே இறுதியில் ஜெயிக்கும்..!
தேய்கின்ற நிலவும், தென்றலும் தீண்ட
இருள் கொண்ட பொழுதும் அழகாகும்..!
குருதியின் உழைப்பு, உண்மைக்கு என்றால்
இருள் கூட ஒளியுடன் கையேந்தும்...!
நன்மைக்கு என்று பொய் ஒன்று என்றால்
வள்ளுவர் வாக்கும் மெய்யாகும்...!
தீயினாய் எழுவாய், தீபமாய் திகழ்வாய்
செந்தமிழ் குரலே குழல் தேனும்...!
சாலைப் பூக்களிடம் இருந்து சில வரிகள்...!
ஏழை மதத்தில்
ஏழாம் பிறவி நான் தானோ,
கண்கள் தீண்டா
தார்ச்சாலைப் பூவாய் ஆனேனோ....!
கனவிலே என் உணவிலே
எத்தனை உண் வகைகள்,
நிஜத்திலே பெய்த மழையிலே
என் மீது மரக்கிளைகள்....!
தவறிவிழுந்த உணவுத் துண்டு,
எந்தன் பசித் தீருமோ..?
இல்லை,
தூக்கம் கலைந்த அன்புத்தம்பி
நாக்கில் ருசியாகுமோ...!
என் பசி இரு வேளை மூன்றாய் ஆனால்,
பூமித் தான் நின்று தூங்குமோ....!
பறவைப் பிறவி எடுத்து இருந்தால்
வானம் தூரமில்லை,
பசியே எடுக்கா வயிறு இருந்தால்
ஏழைக்கு பயமுமில்லை,
எங்கள் ஏழைத் தாயின் மார்பு சுரந