உள்ளமே உறுதிபடு

நல்லவை நினை மனமே

இங்கு நடப்பவை எல்லாம் நல்லவையே....!

இன்றைய தோல்வி நாளைக்கு தோற்கும்

திண்ணிய நெஞ்சமே இறுதியில் ஜெயிக்கும்..!



தேய்கின்ற நிலவும், தென்றலும் தீண்ட

இருள் கொண்ட பொழுதும் அழகாகும்..!

குருதியின் உழைப்பு, உண்மைக்கு என்றால்

இருள் கூட ஒளியுடன் கையேந்தும்...!

நன்மைக்கு என்று பொய் ஒன்று என்றால்

வள்ளுவர் வாக்கும் மெய்யாகும்...!

தீயினாய் எழுவாய், தீபமாய் திகழ்வாய்

செந்தமிழ் குரலே குழல் தேனும்...!

எழுதியவர் : வாழ்க்கை (27-Jan-15, 6:05 pm)
பார்வை : 123

மேலே