முடியாததை செய்

குற்றங்கள் குறைக்க
குரோதங்கள் மறக்க

தவறுகளை நிறுத்த
தண்டனை பெற்றுக்கொடுக்க

போதையை ஒழிக்க
பேதைகளை காப்பாற்ற

ஏழ்மையை போக்க
இன்னல்கள் விலக்க

சாதிகள் இல்லையென்று
சமத்துவம் பேண

சகலரும் ஒன்றென
சத்தியம் உரைக்க

வேஷங்கள் கலைத்து
நிஜமாய் வாழ

ஊருக்காக சிரிக்காமல்
உண்மையாக சிரிக்க .

முயற்சித்த இவை எதுவும்
முடியவில்லை ..

இருப்பினும் முயற்சிக்கின்றேன்
முடியாதவற்றையே செய்ய.!

எழுதியவர் : கயல்விழி (27-Jan-15, 8:22 am)
Tanglish : mutiyaatathai sei
பார்வை : 830

மேலே