சாலைப் பூக்களிடம் இருந்து சில வரிகள்

சாலைப் பூக்களிடம் இருந்து சில வரிகள்...!


ஏழை மதத்தில்

ஏழாம் பிறவி நான் தானோ,

கண்கள் தீண்டா

தார்ச்சாலைப் பூவாய் ஆனேனோ....!

கனவிலே என் உணவிலே

எத்தனை உண் வகைகள்,

நிஜத்திலே பெய்த மழையிலே

என் மீது மரக்கிளைகள்....!


தவறிவிழுந்த உணவுத் துண்டு,

எந்தன் பசித் தீருமோ..?

இல்லை,

தூக்கம் கலைந்த அன்புத்தம்பி

நாக்கில் ருசியாகுமோ...!

என் பசி இரு வேளை மூன்றாய் ஆனால்,

பூமித் தான் நின்று தூங்குமோ....!


பறவைப் பிறவி எடுத்து இருந்தால்

வானம் தூரமில்லை,

பசியே எடுக்கா வயிறு இருந்தால்

ஏழைக்கு பயமுமில்லை,

எங்கள் ஏழைத் தாயின் மார்பு சுரந்தால்

எங்கள் கண்ணில் ஈரமில்லை...!

எழுதியவர் : கவிஞர் சௌந்தரராஜன் (12-Dec-14, 2:47 pm)
பார்வை : 75

மேலே