குளம்

அந்தக்
குளத்தில்..
ஓரத்தில் .. நடுவில்
ஒரே பாசி..
உள்ளே நிறைய சேறு..
அள்ளி முகர்ந்து அருந்த
முடியாத நீர்..
அதன் கரையில் கூட
மனிதர் வந்து நிற்க முடியாத
அளவுக்கு அதன் உபயோகம்..
ஆனாலும் ..
அதுவும் ..
ஒரு குளம் தான் .!
இப்படித்தான் இருக்கின்றன
சில உள்ளம் ..
அழுக்கும் பாசியும்
சேரும் நாற்றமும் கொண்டு
யாருக்கும் பயனின்றி..!
ஆனாலும்..
அதுவும் உள்ளம்தான் !
தூர் வாரினால்
எல்லாம் சரியாகும்..!