உதவியா பிச்சையா
உதவியா..? பிச்சையா..?
இயலாதவனுக்கு செய்வது உதவி
இயன்றவன் பெறுவது பிச்சை.
பிச்சையும்,இச்சையும்
நிரம்புகின்ற நாள் ஏது..?
அன்புள்ளது ஐந்தறிவு ,
ஆசையும் சேர்ந்ததெல்லாம் ஆறறிவோ..!
உதவி செய்யும்
உணர்வுள்ள விலங்குண்டு,
ஆனால், பிச்சையிடும்
பிச்சைப் பெற்ற விலங்குகள் பிறக்கவில்லை..!
யானையைச் சொல்லாதே
பாகனையும் ,
அதன் நெற்றிப் பொட்டு பகவானையும் சொல்
பிச்சை பெற்றோன் என்று..!
அளிப்பவனுக்கு பிச்சை என்றாலும்,
பெற்றவனுக்கு உதவியாகட்டும்.
உன் கைகளும்,
பன் கைக்கு கொடுக்கட்டும்.
பிச்சையா..? உதவியா..? என்று உள் மனதோடு
ஆலோசனை கொள்.
மல்லிகைச் செடிக்கு
கொடிப் பிச்சையில்லை,
கோடையில் வான் மழை
புவிக்குப் பிச்சையில்லை,
மேடையில் வாய்ப்பு
கவிஞனுக்குப் பிச்சையில்லை,
ஓடை மேல் ஒரு இலை
சிறு எறும்புக்குப் பிச்சையில்லை .
பிச்சை என்றால்..?
உழைக்காத உயிருக்கு
ஊதியம் பிச்சை ,
உழைக்கத் தான் கேட்டிடும்
ஊழலும் பிச்சை ,
வாய் கிழிய பேசும்
சாதியம் பிச்சை ,
நாளைக்கு பலன் சொல்லும்
சோதியம் பிச்சை ...!
உதவியாக பெற்றுக் கொள்
உதவியாக கொடுத்து செல்.
நன்றி மறப்பதை மட்டும்
பொழுதேனும் கொள்ளாதே,
அதுபோல் நன்றி என்பதை
ஒரு போதும் எதிர்ப்பார்த்து நில்லாதே...
வானமும், பூமியும் கொடுத்ததை விடவா ,
நீயும் நானும் கொடுத்துவிட்டோம்....!

