தமிழர் திருநாள்

பொங்கல் என்று சொல்லிப்பார்த்தால்

உள்ளங்கள் பொங்கும்,

உலையும் பொங்கும்,

காளைகள் துள்ளும்,

நெல்மணிகள் அள்ளும்,

நன்றிகள் சொல்லும் திருநாள்.....!



தைத் திங்களில்

ஞாயிறுக்கும்,

மாரிக்கும்,

உள்ளம் பூரிக்க

நன்றி சொல்லும் திருநாள்....!



சேற்றில் வைக்கும் கால்களுக்கும்,

நாற்றில் விடும் பயிர்களுக்கும்,

நன்றி சொல்லும் திருநாள்....!

மண்பானைகளை

இன்றுவரை உயிர்ப்பித்து,

அலங்காநல்லூருக்கும்,

செங்கரும்புக்கும்,

பெருமை சேர்க்கும் திருநாள்...!


வானும் மண்ணும் உள்ளவரை

என்று சொல்வதை விட,

கதிரவனும் காற்றும் உள்ளவரை

என்று சொல்வதை விட,

நீங்களும் நானும் உள்ளவரை

என்று சொல்வதை விட,

உண்ணும் வாய் உள்ளவரை,

உழைக்கும் வர்க்கம் உள்ளவரை,

உண்மைத் தமிழன் உள்ளவரை,

பொங்கல் பொங்கட்டும்,

இன்பத்தோடு....!

எழுதியவர் : (7-Feb-15, 12:03 pm)
Tanglish : thamizhar thirunaal
பார்வை : 85

மேலே