ஆதலினால் காதல் செய்வீர்

.செம்மொழியான தமிழ் மொழியையும் .
சுண்ணாம்பு அடித்த சுவர்களையும்
புகைவண்டி பெட்டிகளையும்
காய் கனி ,நிழல் மழை தரும் மரங்களையும்
காதல் செய்……….

கூன்விழுந்த கிழவியையும் .....
தெருவோர குடிசைகளையும்
உயிர் வாழ உணவளித்த விவசாயியையும்
விளைச்சல் தந்த மண்ணையும்
ஒளி தந்த சூரியனையும்
இருளை தந்த சந்திரனையும் .
மழை தந்த மேகத்தையும்
காதல் செய்…

நம் சுதந்திரமாய் வாழ
சுதந்திரம் பெற்று தந்த மகாத்மா காந்தியையும்,
உன் வாழ்க்கையின் தோல்விகளையும்
உன் வாழ்க்கையின் வெற்றிகளையும்
காதல் செய்………..
பாசம் தந்த தாயையும்...
தன்னம்பிக்கையை கொடுத்த தந்தையும்
உறவை கொடுத்த மனைவியையும்

அறிவை தந்த ஆசானையும்
தோள் கொடுத்த தோழனையும்
இனம் மொழி கடந்து இந்தியர்களையும்
காதல் செய்…….
காதலால் ஒன்றுதான் கல்லை கூட இதயமாக்கவும்
முடியும் ..........
காயை கூட கனியாக்க முடியும் ......
ஒரு தரம் நம் தேசத்தை காதலித்து பார்..
அந்த நொடி
மரங்களும்
மண் உறவாகும்…
இயற்கை அழகும் தெரியும் ..
உன் பாதம் மண்ணை இதமாய் வருடி செல்வதை உணர்வாய் .
பூமியின் இதய துடிப்பை உணர்வாய் ..

.

எழுதியவர் : அஞ்சலி (7-Feb-15, 3:19 am)
பார்வை : 93

மேலே