நான் தனியன்
யாருமில்லை
அருகேயும்
அகத்தேயும்
அன்புக்குமட்டுமேனும்
அருகதை இல்லை
அழும் கதைதான்
என்பக்கத்தின்
எல்லா பக்கமும்
அணைத்துக்கொண்டே
அழைத்துக்கொண்டு செல்கிறது
கண்ணீரின் கைகள்
கனலின் வழியே
சிரித்துக் கொண்டே
மறைத்துக்கொண்டேன்
என்னில் சிறைபட்டுபோன
சிறு ரணங்களை கூட
என்றும் விழித்துக்கொண்டே
வலித்துக்கொண்டிருபேன்
விடியலின்
விழுதுகளைநோக்கி...