கண்ணீர் கவிதை
தனிமையின் வழியில்
நகர்கிறது
என் வாழ்நாட்கள்...
விழியோரம்
வலிகளின் ஈரம்
துளிகளாய் வழிய...
விடியும் பொழுதுகளில்
ஏக்கங்கள் நிறைய ..
வாழ்வோ கனலாக
வாழும் நாட்களோ
கானலாக..
சுற்றித்திரிகிரேன்
சுற்றமற்று .....
தோள் சாய்ந்திட யாருமில்லை
தோளில் சாய்ந்திட நீயும் இல்லை....
நான் போக பாதை இல்லை..
உடன் பயணிக்க எவரும் இல்லை...
எனக்கே
நான் யாரோ
எனக்காய் இனி யாரோ ?
என தோன்ற
என் தோற்றமோ
பொய்யாய் போக
நான் போகிறேன் !
மெய் மறந்து
என் பாதைகளில்,
விழிகளின் ஈரம் காயாமல் ,
நெஞ்சின் காயம் ஆறாமல்,
கண்ணீர்த் துளி வரையும்
கவிதைகளில்
வரி(லி)களாக .......