உன்னை காணாது எனக்கு விடியல் இல்லை
காதல் கடிவாளம்
எனக்கில்லை ஒருநாளும்
உன் நினைவுகள் அது போதும்
மனமே விழா காணும்
இதயம் என்பதெல்லாம்
உன்னை நினைக்கதான்
என்னை பொறுத்தவரை
என் மனம் உனக்குத்தான்
உள்ளங்கைகளில் உன்னை சுமப்பேன்
என் உயிர் உள்ளவரை
மரணத்தை தாண்டி நிற்ப்பேன்
உன் உயிர் உள்ளவரை
உன் நினைவுகள் உள்ளவரை
ஓயாது கவிதை அலை
உன்னை காணாது
எனக்கு விடியல் இல்லை