கண்களால் காதல் உண்டு
வானுக்கு எல்லை இல்லை
வர்ணிக்க வார்த்தை இல்லை
காதலில் பொய்யும் இல்லை
பிறகெப்படி கவிதை என் கவலை
பொய்யிலா முதல் கவிதை
உன் பெயரை எழுதுகிறேன்
அதைவிட ஒரு கவிதை
எனக்கு தெரியவில்லை
கண்களால் காட்சி உண்டு
கண்களால் கனவு உண்டு
கண்களால் காதல் உண்டு
என கண்டேன் உன்னால்தான்